ADDED : ஜூலை 26, 2025 02:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜேந்திர சோழன், கங்கை வரை சென்று போ ர்களில் வெற்றி பெற்றதை நினைவு கூரும் வகையில், கங்கைகொண்ட சோழபுரம் கோவிலை கட்டினார். அங்கு புன்னேரி எனப்படும் சோழகங்கம் ஏரியையும், அவர் உருவாக்கினார்.
மொத்தம், 700 ஏக்கர் பரப்புள்ள இந்த ஏரியால், 1,374 ஏக்கர் பகுதிகள் பாசன வசதி பெற்றன. இங்கு மேம்பாட்டு பணிகளுக்காக, 19 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், 12 கோடி ரூபாய் ஏரியை சீரமைக்கவும், அதன் மதகுகள், கரைகளை புதுப்பிக்கவும் பயன் படுத்தப்படும். இந்த இடத்தை உருவாக்கியதன் , 1,000வது ஆண்டை முன்னிட்டு, பிரதமர் மோடி, தமிழகம் வருகை தர உள்ளார். இதுபோன்ற நம் வரலாற்று சின்னங்களை பார்வையிட பிரதமர் மோடி வருவது, தமிழகத்துக்கு பெருமை அளிக்கும் விஷயம்.
- தங்கம் தென்னரசு,
தமிழக அமைச்சர், தி.மு.க.,

