செல்வச்செழிப்பில் வாழ்ந்தவர் ஸ்டாலின் நான் கஷ்டப்பட்டவன்:பழனிசாமி
செல்வச்செழிப்பில் வாழ்ந்தவர் ஸ்டாலின் நான் கஷ்டப்பட்டவன்:பழனிசாமி
ADDED : மார் 31, 2024 07:30 PM

மயிலாடுதுறை :எனது அடையாளம் விவசாயி. நான் வந்த பாதை வேறு ஸ்டாலின் வந்த பாதை வேறு அவர் செல்வச்செழிப்பில் வாழ்ந்தவர் நான் கஷ்டப்பட்டவன் என மயிலாடுதுறை அதிமுக வேட்பாளர் பாவுவை ஆதரித்து பேசிய பழனிசாமி கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது: டெல்டா மாவட்டங்களில் தொழிற்சாலைகளை கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்தது.பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து டெல்டா பகுதியை பாதுகாத்தது அ.திமு.க தான். கையில் மண்வெட்டி பிடித்து இப்பவும் விவசாயம் செய்து வருகிறேன். திமுக அழுத்தம் கொடுக்க தவறியதால் கர்நாடகா காவிரி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்கவில்லை. மீத்தேன், ஹை ட்ரோ திட்டங்களுக்கு கையெழுத்து போட்டது திமுக. அதனை தடுத்தது அதிமுக .காவிரி விவகாரத்தில் விவசாயிகளுக்காக பார்லியை 22 நாட்கள் முடக்கியது அ.தி.மு.க., .ஸ்டாலினால் தமிழகத்தையே காப்பாற்ற முடியவில்லை தமிழகத்தையே ஒழுங்காக காப்பாற்ற முடியாத ஸ்டாலின் இந்தியாவை காப்பாற்ற போகிறாராம். ராகுல் பிரதமர் ஆவார் என ஸ்டாலின் சொன்னார் அவரது எதிர்கட்சி தலைவர் பதவி பறிபோனது
அதிமுகவிற்கு ஆதரவாக கவர்னர் இல்லை
மயிலாடுதுறை மாவட்டத்தை உருவாக்கியது அதிமுக தான். எங்கள் திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டுகிறது. திமுக அரசு மீது கவர்னரிடம் அளித்த புகார் மீது கவர்னர் நடவடிக்கை எடுக்கவில்லை.கருத்து வேறுபாடுகள் கொண்ட இண்டியா கூட்டணியால் எப்படி நிலையான ஆட்சியை தர முடியும். விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை கொண்டு வந்தது அ.தி.மு.க.,
மக்கள் மீது அக்கறை இல்லாத முதல்வர் தமிழ்நாட்டை ஆட்சி செய்கிறார் முதல்வருக்கு டெல்டா விவசாயிகளை பற்றி கவலையில்லை, அவருக்கு தேவையெல்லாம் ஆட்சி அதிகாரம் தான். முதல்வரை நம்பி வாக்களித்தால் ஆண்டவனால் கூட தமிழ்நாட்டை காப்பாற்றமுடியாது.
பா.ஜ. மோடியை பார்த்து எங்களுக்கு பயம் இல்லை யாரை கண்டும் எங்களுக்கு பயமில்லை. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

