நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக அரசு பாடத்திட்டத்தில், பிளஸ் 2 தேர்வு எழுதிய, எட்டு லட்சம் மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி, துவங்கியது.
இப்பணியில், 46,000 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிந்ததும், மதிப்பெண் பதிவேற்றும் பணிகளில் ஈடுபடுவர். அடுத்த மாதம் 9ம் தேதி, தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை, அரசு தேர்வு இயக்ககம் செய்துள்ளது.

