விநாயகர் சதுர்த்தி நாளில் கிறிஸ்துவர்களுடன் சீமான் உரையாடல்
விநாயகர் சதுர்த்தி நாளில் கிறிஸ்துவர்களுடன் சீமான் உரையாடல்
UPDATED : ஆக 26, 2025 06:42 AM
ADDED : ஆக 26, 2025 04:39 AM

சென்னை: விநாயகர் சதுர்த்தி நாளில், நா.த.க., சார்பில் கிறிஸ்துவர்களுடன் உரையாடும் நிகழ்வு நடக்கிறது.
நாம் தமிழர் கட்சியின் உலக தமிழ் கிறிஸ்துவர் இயக்கம் சார்பில், 'உரையாடுவோம் வாருங்கள்' என்ற கிறிஸ்துவர்களுடன் உரையாடல் நிகழ்ச்சி, நாளை நடக்க உள்ளது. திருச்சி ரயில் நிலையம் அருகே, சுமங்கலி திருமண மண்டபத்தில் நடக்கும் நிகழ்வில், கிறிஸ்துவர்களுக்கான அரசியல் கேள்விகளுக்கு, நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளிக்க உள்ளார்.
ஏற்கனவே, கள் இறக்க அனுமதிக்க கோரி, பனை மரம் ஏறி போராட்டம் நடத்திய சீமான், அடுத்ததாக, 'கால்நடைகளுக்காக பேசுவேன்' என்றார். இதற்காக ஆடு, மாடுகளுக்கான மாநாட்டை நடத்தினார். பின், 'மரங்களுக்காக பேசுவேன்' என்று சொல்லி மரங்கள் மாநாடு நடத்தினார். இதன் தொடர்ச்சியாக, தற்போது கிறிஸ்துவர்களுக்கான உரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
இப்படி வித்தியாசமாக எதையாவது செய்து, மக்கள் கவனத்தை தன் பக்கம் ஈர்க்கும் முயற்சியில் சீமான் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.