அடுக்குமாடி குடியிருப்புக்கான திருத்தப்பட்ட சட்டம் அமலானது
அடுக்குமாடி குடியிருப்புக்கான திருத்தப்பட்ட சட்டம் அமலானது
ADDED : மார் 14, 2024 12:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:திருத்தி அமைக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் சட்டம், மார்ச் 6ல் அமலுக்கு வந்துள்ளதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் பரவலாக அதிகரித்து வருகின்றன.
இதில் வீடு வாங்கும் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான சட்டத் தேவையை கருத்தில் கொண்டு, 1994ல் அடுக்குமாடி குடியிருப்பு உரிமை யாளர் சட்டம் நிறைவேற்றப்பட்டது; விதிமுறைகள், 1995ல் வெளியிடப்பட்டன.
இதில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, வரைவு ஆவணம் 2022 ஏப்ரலில் வெளியிடப்பட்டு, கடந்த 6ம் தேதி அமலுக்கு வந்தது.
இதற்கான அரசிதழ் அறிவிப்பை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலர் காகர்லா உஷா வெளியிட்டுஉள்ளார்.

