ADDED : பிப் 07, 2024 03:31 AM

கடந்த 1760 ஜனவரியில் பிரஞ்சு படையும்; ஆங்கிலேயர் படையும் பெரும்
போரை நடத்திய மண் வந்தவாசியிலும், திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட
வேதபுரீஸ்வரர் என்ற சுயம்புவாக எழுந்தருளியுள்ள
சிவபெருமானின் திருக்கோவிலும் அமைந்து இருக்கும் செய்யாறிலும்,
1100 ஆண்டுகள் பழமையான வரதராஜர் கோவில் அமைந்துள்ள தொண்டை
மண்டலத்தின் சிறப்புமிக்க ஆற்காடு சட்டசபை தொகுதியிலுமாக என் மண்; என் மக்கள் பாதயாத்திரை, மக்கள் சூழ்ந்து நின்று வரவேற்பளிக்க மிகச் சிறப்பாக நடந்தது
கல்விக்கேற்ற வேலை
தமிழக அரசியல், ஐம்பது ஆண்டுகளாக, ஊழல், ஜாதி, குடும்ப அரசியல், அடாவடித்தனம் இவற்றை மையமாகக் கொண்டே நடக்கிறது. இளைஞர்களுக்கு கல்விக்கேற்ற வேலை, அதற்கேற்ற ஊதியம் இல்லை. தமிழகத்தில் நேர்மையான, ஊழலற்ற, அனைவருக்குமான அரசியல் மாற்றம் உருவாக வேண்டுமானால், அது பா.ஜ.,வால் மட்டும்தான் முடியும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், 57,004 பேருக்கு பிரதமரின் வீடு, 4,81,495 வீடுகளில் குழாயில் குடிநீர் என மாவட்டம் முழுதும் செய்யப்பட்ட மத்திய அரசின் திட்டங்களை பட்டியலிடலாம்.
இப்படி செய்ய முடியாத ஏக்கம் பலருக்கும் ஏற்படலாம்; பயனடைந்தோர் எண்ணிக்கையும் அதிகம்.
கடந்த 2022-- - 23ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு தொகை, 663 கோடி ரூபாய் நிதியை, மத்திய அரசு, தமிழக அரசுக்கு வழங்கி விட்டது.
ஆனால், தி.மு.க., அரசு, அந்த நிதியை விவசாயிகளுக்கு இன்னும் வழங்காமல் வஞ்சித்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில், 2022 - -23 மற்றும் 2023- - 24ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு தொகையை, விவசாயிகளுக்கு இன்னும் வழங்காததால், தி.மு.க., அரசைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம் அறிவித்துள்ளனர். தி.மு.க., அரசு எப்போதுமே விவசாயிகளின் எதிரியாகத்தான் செயல்பட்டு வருகிறது.
295 வாக்குறுதிகள்
முப்பது வயதுக்கு உட்பட்ட தமிழகக் கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி கொடுத்திருந்தது தி.மு.க., இந்த வாக்குறுதியை நிறைவேற்ற, அரசுக்கு 16,500 கோடி ரூபாய் தேவைப்படும். அதை செய்ய முடியாமல் தடுமாறி, தமிழக இளைஞர்களை ஏமாற்றி உள்ளது. தி.மு.க., அரசு.
l மீனவர்களுக்கு தனித் துறை உருவாக்கி, 10,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு
l ஜல்ஜீவன் திட்டம் மூலம் ஒவ்வொரு வீட்டுக்கும் குழாயில் குடிநீர்
l பழங்குடியினர் மேம்பாட்டுக்கு 24,000 கோடி ஒதுக்கீடு, மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு
l 10,000 விவசாய உற்பத்தி நிலையங்கள், முத்தலாக் சட்டம், பெட்ரோலுடன் எத்தனால் கலந்து எரிபொருளாகப் பயன்படுத்துதல்
l சிறு, குறு விவசாயி களுக்கு ஓய்வூதியம், நீர் மேலாண்மைக்கு தனித் துறை
l சிறப்பு சட்டம் 370 நீக்கம்
l ராமர் கோவில் கட்டுதல் என, சொல்லப்பட்ட 295 வாக்குறுதிகளையும் நிறைவேற்றியிருக்கிறார், பிரதமர் மோடி.
மூன்று பேர் மட்டும்
பழங்குடி சமுதாயத்தில் இருந்து முதன்முதலாக ஜனாதிபதியை தேர்ந்தெடுத்துள்ளோம். மத்திய அமைச்சரவையில், மொத்தம் 76 அமைச்சர்களில், 12 பேர் பட்டியல் சமுதாயத்தினர்; 8 பேர் பழங்குடியினர். 25 சதவீதத்துக்கும் அதிகமான பிரதிநிதித்துவம் பட்டியல் மற்றும் பழங்குடியின சமூகத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
ஆனால், தமிழகத்தில் வெறும் 3 பேர் மட்டும் பட்டியல் சமூகத்தவர். இதில் எது உண்மையான சமூக நீதி என்பதை மக்கள் புரிந்து கொள்ளட்டும்.
ஆற்காடு மக்களின் நெடு நாள் கோரிக்கையான நகரியிலிருந்து திண்டிவனத்துக்கு ரயில் போக்குவரத்துக்காக, பா.ஜ.,வினருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
அதற்காக, இந்த ஆண்டு மத்திய அரசு பட்ஜெட்டில், 350 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது; விரைவில் நிறைவேற்றப்படும்.
இப்படி மக்கள் கோரிக்கைக்கு காது கொடுக்கும் கட்சி பா.ஜ., அதே போல, அதை கணிவோடு பரிசீலித்து செயல்வடிவாக்கும் அரசு பா.ஜ.,
இப்படிப்பட்ட ஆட்சிதான், இனி இந்தியாவுக்கு தேவை என்பதை, மக்கள் முடிவெடுத்து விட்டனர். அதற்கேற்ப, மக்கள் பணியில் பா.ஜ., தன்னை முழுமையாக தயார்படுத்திக் கொண்டு விட்டது.
இதனால் எதிர்க்கட்சி களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்!

