ADDED : அக் 15, 2024 01:00 AM

சென்னை: தலைமை செயலாளர் முருகானந்தம் கூறியது,
அரசு நிர்வாகத்தை பொறுத்தவரை மழையை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் உள்ளோம்; அனைத்து துறைகளும் தயாராக உள்ளன. மழையை எதிர்கொள்ள, மாவட்ட நிர்வாகங்கள் கடந்த ஒரு மாதமாகவே ஏற்பாடுகளை செய்து வருகின்றன. மக்களை எங்கு தங்க வைக்க வேண்டும்; உணவு தயார் செய்ய வேண்டும் என, முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெரும்பாலான இடங்களில் மழைநீர் கால்வாய் பணிகள் முடிந்து விட்டன. பணிகள் முடியாத இடங்களில், அதிக பம்புகளை வைத்து, நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், வெள்ளப் பாதிப்பு ஏற்படும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மழையின் தன்மைக்கேற்ப, கடலோர மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து, கலெக்டர்கள் முடிவு செய்து கொள்ளலாம்.

