ADDED : டிச 28, 2025 01:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ராமேஸ்வரத்தில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் பனாரஸ்க்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டு உள்ள அறிக்கை:
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் இருந்து, வரும் 30ம் தேதி இரவு 11:50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், சென்னை எழும்பூர் வழியாக, அடுத்த நான்காவது நாள் பகல் 12:00 மணிக்கு, பனாரஸ் செல்லும்.
பனாரஸில் இருந்து, வரும் ஜனவரி 2ம் தேதி இரவு 11:00 மணிக்கு புறப்பட்டு, அடுத்த மூன்றாவது நாள் இரவு 10:00 மணிக்கு, சென்னை கடற்கரை வந்தடையும். டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

