கோவை, நீலகிரியில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை
கோவை, நீலகிரியில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை
ADDED : ஜூலை 11, 2025 02:52 PM

சென்னை: ஜூலை 15 முதல் 3 நாட்கள் கோவை மற்றும் நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
மேற்கு திசை காற்றின் மாறுபாடு எதிரொலியாக, வரும் 15ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
கோவை மற்றும் நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் வரும் 15ம் தேதி முதல் 17ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம்.
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல், வடமேற்கு அரபிக்கடலின் தெற்கு பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 கிமீ முதல் 55 கிமீ வரை வீசக்கூடும். இடையிடையே 65 கிமீ வேகத்திலும், மத்திய கிழக்கு, தென் கிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும் காற்று வீசக்கூடும்.
எனவே இந்த பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.