ADDED : அக் 27, 2024 12:07 AM

சென்னை:பூர்விகா அப்ளையன்சஸ், 25வது கிளை அம்பத்துாரில் துவக்கப்பட்டுள்ளது.
சென்னை அம்பத்துார், சி.டி.எச்., சாலை, கிருஷ்ணாபுரம் பகுதியில், பூர்விகா அப்ளையன்சஸ், 25வது கிளையை, அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி யுவராஜ் நடராஜன், நிர்வாக இயக்குனர் கன்னி யுவராஜ், அம்பத்துார் எம்.எல்.ஏ., ஜோசப் சாமுவேல் ஆகியோர் சமீபத்தில் திறந்து வைத்தனர்.
விழாவில், நிறுவன தலைமை செயல் அதிகாரி யுவராஜ் நடராஜன் பேசியதாவது:
மொபைல்போன் விற்பனையில், தமிழகத்தில் மனதில் நம்பர் 1 இடத்தை பூர்விகா நிறுவனம் பிடித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக, 475க்கும் மேற்பட்ட ஷோரூம்களுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போது, 'டிவி, பிரிஜ், வாஷிங்மெஷின், ஏசி' போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்யும் பூர்விகா அப்ளையன்சஸ், அம்பத்துாரில் துவக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிர்வாக இயக்குனர் கன்னி யுவராஜ் பேசுகையில், ''பூர்விகா நிறுவனத்தை, நம்பர் 1 நிறுவனமாக வளர்த்த வாடிக்கையாளர்களுக்கு நன்றி. பூர்விகா அப்ளையன்சசில், உலகத்தரம் வாய்ந்த வீட்டு உபயோகப் பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. மாநிலம் முழுதும், 100 பூர்விகா அப்ளையன்சஸ் கிளையை திறக்க, இலக்குடன் செயல்பட்டு வருகிறோம்,'' என்றார்.

