தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 1 - 9 வகுப்புகளுக்கு முன்கூட்டியே தேர்வு

 1 - 9 வகுப்புகளுக்கு முன்கூட்டியே தேர்வு

 1 - 9 வகுப்புகளுக்கு முன்கூட்டியே தேர்வு


ADDED : மார் 21, 2026 06:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2026 06:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஏப்., 24ம் தேதி வரை, முழு ஆண்டு தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டது.

இந்நிலையில், ஏப்., 23ல் சட்டசபை தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, ஏப்., 1 முதல் 16ம் தேதி வரை தேர்வுகள் நடத்த ஒப்புதல் பெறப்பட்டு, பள்ளிக்கல்வித் துறை சார்பில் நேற்று தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது.

அதன்படி, ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்., 1ம் தேதியிலிருந்தும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஏப்., 6ம் தேதியிலிருந்தும் தேர்வுகள் துவங்கி, ஏப்., 16ம் தேதி நிறைவடைய உள்ளன.

மேலும், ஒன்று, மூன்று, ஐந்து, ஆறாம் வகுப்புகளுக்கு, காலை 10:00 மணி முதல் 12:00 மணி வரை, எட்டாம் வகுப்புக்கு காலை 10:00 மணி முதல் 12:30 மணி வரை தேர்வுகள் நடக்கும். அதேபோல், இரண்டு, நான்கு, ஏழாம் வகுப்புகளுக்கு, பகல் 2:00 மணி முதல் 4:00 மணி வரை, ஒன்பதாம் வகுப்புக்கு பகல் 2:00 மணி முதல் 4:30 மணி வரை தேர்வுகள் நடக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us