ADDED : மார் 12, 2024 02:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு கோரி, 15 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
சங்கரன்கோவில் மற்றும் புளியங்குடி, சிந்தாமணி பகுதிகளில் 6,000 விசைத்தறிகள் செயல்படுகின்றன. இவற்றில் 16,000 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு வழங்கப்படுவது வழக்கம். ஆனால், இரு ஆண்டுகளாக கூலி உயர்வு வழங்கப்படவில்லை.
எனவே கூலி உயர்வு வழங்க கோரி, 15 நாட்களாக விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

