ADDED : பிப் 14, 2024 01:37 AM
தமிழ்நாடு மின்சார வாரியமானது, முதலில் தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மின் தொடரமைப்பு கழகம் என, இரண்டாகப் பிரிக்கப்பட்டது. தற்போது, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை, தமிழக மின் உற்பத்தி கழகம், தமிழக மின் பகிர்மான கழகம் மற்றும் தமிழக பசுமை மின்சார கழகம் என, மேலும் மூன்றாக பிரித்துள்ளது, மின் வாரியத்தை மேலும் பலவீனப்படுத்துகிறது.
கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில், மின்சாரத்தை அதிக விலைக்கு தனியார் நிறுவனங்களிடமிருந்து வாங்கியதால், கடன் தொகை அதிகரித்து விட்டது. தற்போது மின்சார வாரியத்திற்கு, 1.67 லட்சம் கோடி கடன் உள்ளது. அதை சரி செய்வது என்ற பெயரில், தற்போது அரசு, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை மூன்று கம்பெனிகளாக பிரிவினை செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு தன் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து, இந்த அரசாணைகளை திரும்ப பெற வேண்டும்.
-கே.பாலகிருஷ்ணன்,
மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர்.

