பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரூ.3000 டோக்கன் வினியோகம்: எங்கு, எப்படி பெறுவது? இதோ விவரம்
பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரூ.3000 டோக்கன் வினியோகம்: எங்கு, எப்படி பெறுவது? இதோ விவரம்
UPDATED : ஜன 04, 2026 05:00 PM
ADDED : ஜன 04, 2026 04:37 PM

சென்னை: தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் வினியோகம் தொடங்கி உள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட ஏதுவாக, பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரூ.3000 ரொக்கம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதையடுத்து, பொங்கல் பரிசை சுமூகமாக பயனாளிகளுக்கு சென்று சேரும் வகையில் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுக்கான டோக்கன் வினியோகம் செய்யும் பணி தொடங்கி இருக்கிறது.
தலைநகர் சென்னையில், பயனாளிகளின் வீடுகளுக்குச் சென்று டோக்கன் வினியோகிக்கும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இந்த டோக்கனில் அவருக்கு பொங்கல் பரிசு அளிக்கப்படும் அல்லது பரிசுத் தொகை பெறும் நேரம், தேதியுடன் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும், ரேஷன் கடையின் பெயர், குடும்ப அட்டைதாரர் பெயர், அட்டை எண், தெரு, டோக்கன் எண் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் குறிப்பட்ட விவரங்களை பின்பற்றி, உரிய தேதியில், உரிய நேரத்தில் பயனாளிகள் பொங்கல் பரிசை பெற்றுக் கொள்ளலாம்.
பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே அனைத்து பயனாளிகளுக்கும் பரிசுத்தொகுப்பு மற்றும் ரொக்கத்தை அளிக்க நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டு வருகின்றன. அனேகமாக ஜன.8 அல்லது ஜன.9ம் தேதி முதல் இவை வினியோகிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

