ADDED : டிச 18, 2025 03:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: செ ன்னை நந்தனம் பகுதியில், புதிதாக மதுபான பார் திறந்துள்ள, ஹரிச்சந்திரன் என்பவரை மிரட்டி, 'யு டியூபர்' சவுக்கு சங்கர், 94,000 ரூபாய் பறித்ததாக சைதாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இவ்வழக்கில், கடந்த 12ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது, திரைப்பட தயாரிப்பு நிறுவனம் அளித்த அவதுாறு புகார் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்து, மீண்டும் அவரை கைது செய்தனர். இவ்வழக்கில், அவரை இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
நேற்று, சென்னை ஆதம்பாக்கம் பார்த்தசாரதி நகர், 3வது தெருவில் சங்கர் நடத்தி வரும் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.
அவர் வாயிலாக, டிஜிட்டல் லாக்கரை திறந்து சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை என, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

