யாரை எந்த இடத்தில் வைக்க வேண்டுமென மக்களுக்கு தெரியும்: நடிகர் விஜய் பேச்சு
யாரை எந்த இடத்தில் வைக்க வேண்டுமென மக்களுக்கு தெரியும்: நடிகர் விஜய் பேச்சு
UPDATED : டிச 28, 2025 08:04 PM
ADDED : டிச 28, 2025 07:48 PM

கோலாலம்பூர்: ''யார் யாரை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என மக்களுக்கு தெரியும். அவர்கள் பார்த்து கொள்வார்கள்'', என மலேஷியாவில் நடந்த ஜனநாயகன் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசினார்.
பாடல் வெளியீட்டு விழா
தவெக என்ற கட்சியை துவக்கி உள்ள நடிகர் விஜய், திரைத்துறையில் தமது கடைசி படமான '' ஜனநாயகன்'' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா மலேஷியாவில் நடந்தது.
விழாவில் விஜய் ''ஐயா ராசா, செல்லங்களா யார்ரா நீங்கலாம், என் நெஞ்சில் குடியிருக்கும்'' என பேச தொடங்கினார். முதலில் மலேசியாவை புகழ்ந்தார்.
நன்றி
தொடர்ந்து விஜய் பேசியதாவது: 'இலங்கைக்கு பிறகு மலேஷியாவில் அதிகமான தமிழ் மக்கள் பார்க்கிறோம். மலேஷியாவில் நம்ம நண்பர் அஜித் நடித்த பில்லா படப்பிடிப்பு கூட இங்கே தான் நடந்துள்ளது. எனது காவலன், குருவி படங்களும் இங்கே எடுத்துள்ளனர். இந்த நிகழ்ச்சியை நன்றாக நடத்த உதவிய மலேஷியா அரசுக்கு எனது மனமார்ந்த நன்றி.
சின்ன மண் வீட்டை கட்ட சினிமா வந்தேன், நீங்கள் பங்களா கொடுத்துவிட்டீர்கள். கடந்த 30 வருடங்களாக எனது பயணத்தில் ரசிகர்கள் உடன் இருந்தார்கள். அடுத்த 30 வருடத்திற்கு நான் அவர்களுடன் இருக்க விரும்புகிறேன். நன்றி என சொல்றவன் இல்ல, நன்றிக்கடன் தீர்த்து விட்டு தான் போவான் இந்த விஜய். எனக்காக எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்த ரசிகர்களுக்காக நான் சினிமாவை விட்டுக் கொடுக்கிறேன்.
நமக்கு எதிரி தேவை

தொடர்ந்து விஜயிடம் ''சினிமாவில் நீங்க விட்டு விட்டு போகும் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என நினைக்கிறோம். நீங்க என்ன நினைக்குறீங்க என தொகுப்பாளர்கள் கேட்டனர்.
அதற்கு விஜய், யார் யாரை எந்த இடத்துல வைக்க வேண்டும் என மக்களுக்கு தெரியும். அவங்க பார்த்துப்பாங்க என்றார்.
அரசியல் குறித்து நேரடியாக பேசவில்லை. மலேஷியாவில் அதற்கு கட்டுப்பாடுகள் இருந்ததால் சில விஷயங்களை மறைமுகமாக பேசினார்.

விஜய் சொன்ன குட்டிக்கதை



நடனம்

சிவகாசி படத்தில் இடம்பெற்ற கோடம்பாக்கம் ஏரியா பாடலுக்கு நடிகர் விஜயின் அம்மா ஷோபா பாடினார்.

