ADDED : மார் 19, 2024 06:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பழநி முருகன் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி பெயரில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தங்கத்தேர் இழுத்தார்.
பழநி முருகன் கோயிலுக்கு முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று வந்தார். கிரிவீதி வரை நடந்து வந்து பேட்டரி கார் மூலம் ரோப்கார் மையம் சென்றார். ரோப்கார் மூலம் முருகன் கோயில் சென்று தரிசனம் செய்தார். அதன் பின் தங்கரதம் இழுக்க பெயரை பதிவு செய்தார்.
அதில் வரிசை எண் 102 ல் அவரது பெயரிலும், வரிசை எண் 103ல் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பெயரிலும் தங்கரதம் இழுக்க பணம் கட்டினார். தங்கரத நிலை ஒன்றிலிருந்து இரண்டு வரை தங்க ரதம் இழுத்தார். ரோப் கார் மூலம் அடிவாரம் வந்த அவர், அவரது குலதெய்வமான தொட்டிச்சி அம்மன் கோயிலிலும் தரிசனம் செய்து திரும்பினார்.

