தீவிரமடையும் பருவ மழை: 17 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
தீவிரமடையும் பருவ மழை: 17 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
UPDATED : அக் 22, 2025 10:31 AM
ADDED : அக் 21, 2025 09:29 PM

சென்னை:  தமிழகத்தில்  பெய்து வரும் கன மழை காரணமாக,   கடலுார்  , செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,  விழுப்புரம் , தஞ்சை , கள்ளக்குறிச்சி  , மயிலாடுதுறை, திருவாரூர் , திருவள்ளூர்  ,ராணிப்பேட்டை,  திருச்சி ஆகிய  17 மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று  (அக்.22)  விடுமுறை 
அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில்  பள்ளிகளுக்கு மட்டும், விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு
 பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து, சென்னை வானிலை மையம் சென்னைக்கு நாளை 
ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டதை அடுத்து, பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 
அளிக்கப்படுகிறது.
சென்னையில் 900 தீயணைப்பு 
வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.மழை நீர் தேங்க வாய்ப்பு உள்ள 17 
இடங்களைக் கண்டறிந்து முன்னெச்சரிக்கையாக தேவையான உபகரணங்கள் உடன் 
முகாமிட்டுள்ளனர்.
இந்நிலையில்   வட கிழக்கு பருவ மழை தீவிமடைந்து வருவதால், கடலுார் மாவட்டத்தில் பள்ளி,கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.  தொடர்ந்து  செங்கல்பட்டு   விழுப்புரம், தஞ்சை  , கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர் ,திருவள்ளூர்      , ராணிபேட்டை என ஓன்பது   மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கும்இன்று  ( அக்.22) விடுமுறை  அளித்து மாவட்ட  நிர்வாகம் அறிவிப்பு  வெளியிட்டுள்ளது.
சென்னை, சிவகங்கை, புதுக்கோட்டை, சேலம், பெரம்பலூர், நாமக்கல்,  மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும்இன்று  (அக்.22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

