
மார்ச் 16, 1929
புதுச்சேரி மாநிலம், கூனிச்சம்பட்டு கிராமத்தில் ராசு - அரங்கநாயகி தம்பதிக்கு மகனாக 1929ல் இதே நாளில் பிறந்தவர், திருமுருகன் எனும் சுப்பிரமணியன்.
இவர் தமிழில் பண்டிதர், புல்லாங்குழல் இசையில் மேல்நிலை, கல்வியியலில் முதுகலை, சிந்துப்பாடல் யாப்பிலக்கண ஆய்வில் முனைவர் உள்ளிட்ட பட்டங்களை பெற்றவர். புதுச்சேரி அரசு பள்ளியில் தமிழாசிரியர், தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் தனி அலுவலர் உள்ளிட்ட பதவிகளை வகித்தார்.
புதுச்சேரியில் தமிழ் ஆட்சிமொழி சட்டத்தை நடைமுறைப்படுத்தி, அரசு ஊழியர்கள் தமிழில் கையெழுத்திட வேண்டும் என்பதற்காக போராடினார்.
தமிழ் வளர்ச்சி நடவடிக்கை குழு சிறப்பு தலைவர், புதுவை தமிழன்பர்கள் தமிழ்ப்பணி அறக்கட்டளை நிறுவனர், 'தெளிதமிழ்' இதழின் ஆசிரியர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தார். 'இலக்கணச்சுடர், முத்தமிழ் சான்றோர், இலக்கணக்கடல்' உள்ளிட்ட பட்டங்களை பெற்ற இவர், 2009, ஜூன் 3ல் தன், 80வது வயதில் மறைந்தார்.
புதுச்சேரி தமிழறிஞர் ரா.திருமுருகன் பிறந்த தினம் இன்று!

