ADDED : மார் 12, 2024 08:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:பொது சுகாதாரத்துறையின் கீழ் பணியாற்றும் அனைத்து நர்ஸ்கள் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை, மதுரை உள்ளிட்ட, 10 மாவட்டஅலுவலகங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சங்கத்தின் பொருளாளர் தமிழ்செல்வி கூறியதாவது:
பதவி உயர்வு மற்றும் பொது கலந்தாய்வு வாயிலாக, 500க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு, பல ஆண்டுகளாக பணியாற்றுபவர்களை பணி நிரந்தரம்செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

