பாக்டீரியாவின் நோய் எதிர்ப்பு திறன் அறிய சென்னை ஐ.ஐ.டி., உருவாக்கிய புதிய 'சிப்'
பாக்டீரியாவின் நோய் எதிர்ப்பு திறன் அறிய சென்னை ஐ.ஐ.டி., உருவாக்கிய புதிய 'சிப்'
ADDED : ஆக 26, 2025 05:21 AM

சென்னை: காய்ச்சலுக்கு காரணமான, பாக்டீரியாவின் நோய் எதிர்ப்பு திறனை அறிய, சென்னை ஐ.ஐ.டி., புதிய 'சிப்' உருவாக்கி உள்ளது.
சென்னை ஐ.ஐ.டி., ஆராய்ச்சியாளர்கள், பாக்டீரியாவின் நோய் எதிர்ப்பு திறன் குறித்து ஆராய, 'மைக்ரோ ப்ளூய்டிக் சிப்' ஒன்றை உருவாக்கி உள்ளனர். இது குறித்து, சென்னை ஐ.ஐ.டி., ரசாயன இன்ஜினியரிங் ஆராய்ச்சி துறை பேராசிரியர் புஷ்பவனம் கூறியதாவது:
மனிதர்களுக்கு பாக்டீரியா தாக்கத்தால் காய்ச்சல் ஏற்படும்போது, மருத்துவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை பரிந்துரை செய்வர்.
அவற்றை நோயாளிகள், இரண்டு நாட்களிலேயே நிறுத்திக் கொள்வதால், அந்த பாக்டீரியாவுக்கு, அந்த மருந்துக்கு எதிரான எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. அடுத்த இரண்டு நாட்களில், அதே பாக்டீரியாவால் காய்ச்சல் ஏற்படும்போது, அதே மருந்தை எடுத்துக் கொண்டா ல், காய்ச்சல் குணமாகாது. அதன்பின், மிகவும் வலிமையான நோய் எதிர்ப்பு சக்தி மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதற்கு, அந்த பாக்டீரியாவின் நோய் எதிர்ப்பு தன் மையை அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு, 'கல்ச்சர் டெஸ்ட்' முடிவுகள் வெளிவர, மூன்று நாட்களாகும். இதை கருத்தில் வைத் து, பாக்டீரியாவின் நோய் எதிர்ப்பு திறனை விரைவாக கண்டறிய, 'மைக்ரோ ப்ளூய்டிக் சிப்' ஒன்றை உருவாக்கி உள்ளோம்.
இதில், சிறுநீரை செலுத்தும்போது, அதில் உள்ள எ லக்ட்ரோடில் இருந்து வெளியேறும் மின்சாரம் காரணமாக, பாக்டீரியாக் கள் தனியே பிரியும். அவை வளர, தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குவோம்.
மேலும், நோய் எதிர்ப்பு திறன் மருந்தையும் வழங்குவோம். மருந்தின் நோய் எதிர்ப்பு திறன் வேலை செய்தால், பாக்டீரியா அழிந்துவிடும், வேலை செய்யவில்லை எனில், பாக்டீரியா வளர்ச்சி அடையும். இதை புதிய சிப் வழியே, மூன்று மணி நேரத்தில் கண்டு பிடித்து விடலாம்.
மருத்துவர்களும், சரியான சிகிச்சையை பரிந்துரைக்க முடியும். காப்புரிமை கிடைத்த தும், 'ஸ்டார்ட் அப்' நிறுவனத்துடன் இணைந்து, விலை குறைவான புதிய 'சிப்'பை வணிகமயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.