sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கோவையில் மோடியின் 'ரோடு ஷோ' திறந்த ஜீப்பில் 2.5 கி.மீ., பயணம்

/

கோவையில் மோடியின் 'ரோடு ஷோ' திறந்த ஜீப்பில் 2.5 கி.மீ., பயணம்

கோவையில் மோடியின் 'ரோடு ஷோ' திறந்த ஜீப்பில் 2.5 கி.மீ., பயணம்

கோவையில் மோடியின் 'ரோடு ஷோ' திறந்த ஜீப்பில் 2.5 கி.மீ., பயணம்


UPDATED : மார் 19, 2024 12:28 AM

ADDED : மார் 19, 2024 12:24 AM

Google News

UPDATED : மார் 19, 2024 12:28 AM ADDED : மார் 19, 2024 12:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவையில் நேற்று நடந்த பிரமாண்ட, 'ரோடு ஷோ' நிகழ்ச்சியில், சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான மக்களும், தொண்டர்களும் கூடியிருந்து வரவேற்க, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திறந்த ஜீப்பில் பிரதமர் மோடி 2.5 கி.மீ., துாரம் பயணித்தார்.

வழி நெடுக மக்கள் திரண்டு நின்று வரவேற்றதால், சந்தோஷம் அடைந்த அவர், இரு கரங்களையும் காட்டி பூரிப்படைந்தார்.

Image 1246540


லோக்சபா தேர்தல் பரப்புரையின் ஒரு பகுதியாக, நேற்று கோவை வந்த பிரதமர் மோடிக்கு, பீளமேடு விமான நிலையத்தில் பா.ஜ., சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கிருந்து, குண்டு துளைக்காத கருப்பு நிற காரில், ரோடு ஷோ துவங்கிய இடமான சாயிபாபா காலனிக்கு மோடி வந்தார். சாலையின் இருபுறமும் பொதுமக்கள், கட்சியினர் திரளாக நின்றிருந்தனர். கண்ணுக்கு எட்டிய துாரம் வரை தாமரைக்கொடி பறந்தது.

Image 1246541


சாலையின் இருபுறமும் நின்றிருந்த தொண்டர்கள், 'வேண்டும் மோடி; மீண்டும் மோடி' என கோஷம் எழுப்ப, ரோடு ஷோ நிகழ்ச்சி துவங்கியது; மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காவி நிற திறந்தவெளி ஜீப்பில், மோடி நின்று, கைகூப்பி வணக்கம் தெரிவித்து, நிகழ்ச்சியை துவக்கினார்.

கோவை மக்கள் மற்றும் தொண்டர்கள் சாரை சாரையாக இருபுறமும் நின்றிருக்க, அவர்களுக்கு மோடி கையசைத்தவாறு சென்றார். மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்த தொண்டர்கள், பூக்களை துாவி வரவேற்றனர்.

Image 1246542


வழித்தடத்தில் உள்ள உயரமான கட்டடங்களில் நின்றிருந்த போலீசார், 'பைனாகுலர்' வாயிலாக கண்காணித்தனர். 20 இடங்களில் மேடை

தொடர்ச்சி 11ம் பக்கம்

கோவையில் மோடியின்...

முதல் பக்கத் தொடர்ச்சி

அமைத்து, கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அக்கலைஞர்களை பார்த்து, மோடி கையசைத்து வணங்கினார்.

ரோடு ஷோ துவங்கிய சாயிபாபா காலனியில் இருந்து, மேட்டுப்பாளையம் ரோடு, டி.வி.சாமி ரோடு வழியாக ஆர்.எஸ்.புரம் டி.பி., ரோடு சந்திப்பு வருவதற்கு, 2.5 கி.மீ., துாரம் மோடி பயணித்து வந்தார்.

புஷ்பாஞ்சலியில் உருக்கம்


ஆர்.எஸ்.புரம் சந்திப்பில், தலைமை தபால் நிலையம் அருகே, 1998ல் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த, புகைப்படங்கள் அச்சிட்ட 'பிளக்ஸ் பேனர்' வைக்கப்பட்டிருந்தது.

அப்புகைப்படங்களை பார்த்து மனம் கலங்கிய பிரதமர் மோடி, சற்று நேரம் மனமுருக வேண்டி, மலர் துாவி அஞ்சலி செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், கோவை மட்டுமின்றி, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த பா.ஜ.,வினர் மற்றும் பொதுமக்கள் திரண்டிருந்தனர்.

நிகழ்ச்சி முடிந்ததும், ரேஸ்கோர்ஸில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு பிரதமர் வந்தடைந்தார். அவர் தங்கியிருக்கும் பகுதியில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கோவையில் ஓய்வெடுக்கும் பிரதமர் மோடி, இன்று காலை 9:30 மணிக்கு பீளமேடு விமான நிலையத்தில் இருந்து, ஹெலிகாப்டரில் கேரள மாநிலம் பாலக்காடு செல்கிறார்.

காத்திருந்த இஸ்லாமியர்

ரோடு ஷோ நிகழ்ச்சியை காண, ஆயிரக்கணக்கான மக்கள் சாலையின் இருபுறமும் மதியம் 3:00 மணி முதல் காத்திருந்தனர். அவர்களின் தாகம் தீர்க்க, பா.ஜ.,வினர் தண்ணீர் பாட்டில் சப்ளை செய்தனர். கோவை குஜராத் சமாஜம் சார்பில், நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. சிந்தாமணி பகுதியில் இஸ்லாமியர் குடும்பத்தினர், கைக்குழந்தையுடன் குடும்பமாக, பிரதமர் மோடியை பார்க்க ஆவலாய் காத்திருந்தனர்.








      Dinamalar
      Follow us