கனிமவள கொள்ளை: நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்?: பசுமை தீர்ப்பாயம் கேள்வி
கனிமவள கொள்ளை: நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்?: பசுமை தீர்ப்பாயம் கேள்வி
ADDED : மார் 14, 2024 04:30 PM

சென்னை: கனிம வள கொள்ளைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரம் இருந்தும் தயக்கம் காட்டுவது ஏன்? என தமிழக அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.
கோவை தடாகம் பகுதியில் சட்ட விரோதமாக கனிமவள கொள்ளை நடைபெறுவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகின. இதன் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கு விசாரணையை பசுமை தீர்ப்பாயம் துவக்கியது. 'கனி வள கொள்ளைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக, குழு அமைக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.
கனிம வள கொள்ளைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரம் இருந்தும் தயக்கம் காட்டுவது ஏன்?. என தமிழக அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது. இதையடுத்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட கலெக்டர் சிறப்பு குழு எடுத்த நடவடிக்கைகள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு மீதான விசாராணையை மே 28ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

