ஜப்பானில் நிலநடுக்கம் ரிக்டரில் 6 ஆக பதிவு : சென்னையிலும் லேசான நில அதிர்வு ரிக்டரில் 3.9 ஆக பதிவு
ஜப்பானில் நிலநடுக்கம் ரிக்டரில் 6 ஆக பதிவு : சென்னையிலும் லேசான நில அதிர்வு ரிக்டரில் 3.9 ஆக பதிவு
UPDATED : மார் 14, 2024 10:45 PM
ADDED : மார் 14, 2024 09:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ஜப்பான் மற்றும் சென்னை புறநகர் பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
திருப்பதியிலிருந்து 58 கி.மீ., தொலைவில் கிழக்கே வடகிழக்கு திசையில் பூமிக்கு அடியில் 10 கி.மீ., ஆழத்தில் இன்று இரவு 8.45 மணியளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 3.9 ஆக பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நில அதிர்வு சென்னையில் புறநகர் பகுதி வரை நீடித்ததாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து ஜப்பானிலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6 ஆக பதிவாகியுள்ளது.

