தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மார்ச் 17 முதல் திமுக வேட்பாளர் தேர்வு நேர்காணல்!

மார்ச் 17 முதல் திமுக வேட்பாளர் தேர்வு நேர்காணல்!

மார்ச் 17 முதல் திமுக வேட்பாளர் தேர்வு நேர்காணல்!


ADDED : மார் 15, 2026 09:47 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2026 09:47 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: மார்ச் 17ம் தேதி முதல் மார்ச் 22ம் தேதி வரை சட்டசபை பொதுத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களை தேர்வு செய்ய நேர்காணல் நடைபெறுகிறது.

இதுகுறித்து திமுக பொதுச்செயலர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

திமுக சார்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தலில் போட்டியிட, விண்ணப்பம் அளித்தவர்களை, கட்சி தலைவர் ஸ்டாலின், மார்ச் 17 முதல் 22ம் தேதி வரை சந்தித்து, வேட்பாளரை தேர்வு செய்ய உள்ளார். நாளை புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிக்கு நேர்காணல் நடக்கும்.

வரும் 18 ம் தேதி காலை துாத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி; மாலை மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை; 19ம் தேதி காலை, கரூர், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி; மாலை கிருஷ்ணகிரி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு நேர்காணல் நடக்கும்.

வரும் 20ம் தேதி காலை ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், திருவண்ணாமலை; மாலை தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி; 21ம் தேதி காலை திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலுார், அரியலுார்; மாலை புதுக்கோட்டை, கடலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர்; 22ம் தேதி காலை விழுப்புரம், காஞ்சிபுரம் தெற்கு; மாலை திருவள்ளூர், காஞ்சிபுரம் வடக்கு, சென்னை மாவட்டங்களுக்கு நேர்காணல் நடக்கும்.

குறிப்பிட்ட தேதிகளில், மாவட்டச் செயலர் மற்றும் வேட்பாளர்கள் வர வேண்டும். அவர்கள், தங்கள் ஆதரவாளர்களை அழைத்து வரக்கூடாது.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us