ADDED : மார் 12, 2024 02:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகே திட்டுவிளையை சேர்ந்தவர் நேசமணி. இவருக்கும், உறவினர் ஞானசிகாமணிக்கும் சொத்து பிரச்னை இருந்தது.
நேசமணியின் மகன் முத்துராஜ், 34, என்பவர், 2005 ஆகஸ்ட், 28-ல் ஞான சிகாமணியை தாக்கினார்.
இதையடுத்து, ஞானசிகாமணி மகன்கள் செல்வன், 33, செல்வ சிங், 32, ஆகியோர் தங்கள் நண்பர்கள் சுரேஷ், 32, ரசீத், 23, துரை, 28, ஆகியோருடன் சேர்ந்து முத்துராஜை கொலை செய்தனர்.
பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நாகர்கோவில் மாவட்ட உதவி அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜோசப் ஜாய் செல்வன், இந்த வழக்கை விசாரித்து, செல்வன், செல்வசிங், சுரேஷ், ரஷீத், துரை ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்தும், மூன்று பேரை விடுவித்தும் தீர்ப்பளித்தார்.

