sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/செட்டில் ஆகலாம்!

செட்டில் ஆகலாம்!

செட்டில் ஆகலாம்!


UPDATED : ஏப் 06, 2026 06:43 AM

ADDED : ஏப் 06, 2026 06:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 06, 2026 06:43 AM ADDED : ஏப் 06, 2026 06:24 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாமரை கட்சி பெற்றிருக்கும் தொகுதிகள் அனைத்தும் சோபிக்கும் தொகுதிகள் அல்ல என தெரிந்தும், அக்கட்சி சார்பில் போட்டியிட ஏராளமானோர் விருப்பப்பட்டனர். 'எதற்காக இப்படி?' என்று மத்திய உளவுத்துறை அதிகாரிகள் விசாரித்துள்ளனர். போட்டி போட்ட பலரிடம் விசாரித்தபோது, 'வெற்றியோ தோல்வியோ, வேட்பாளராகி விட்டால், தேர்தல் செலவுக்கு நிறைய பணம் கொடுப்பர். அதை வைத்து வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம்' என்று சொன்னார்களாம்.

கையின் ரகசிய வேலை


நீண்ட போராட்டத்துக்குப் பின், கை கட்சியை தன்னகத்தே வைத்துக் கொண்டது சூரிய கட்சி. இதற்காக, சில கூடுதல் தொகுதிகளை விட்டுக் கொடுத்தனர். இதையடுத்து, சூரிய கட்சி சார்பில் கருத்துக் கணிப்புக்கு போனவர்கள் பலரும், கை கட்சியினர் பற்றி விசாரித்துள்ளனர். அக்கட்சியினர் பலரும், பல தொகுதிகளில் விசிலுக்கு ரகசியமாக வேலை செய்து வருவதை கண்டுள்ளனர். இதை சூரிய கட்சி தலைமைக்கு தெரியப்படுத்த, 'விடுங்க பாத்துக்கலாம்' என்று சொல்லி விட்டனராம்.



கிடுகிடுக்கும் பவன்


3. கை கட்சியின் செல்வமான தலைவர் மீது அடுத்த புகாரை கிளப்புகின்றனர். மாம்பழ கட்சியைச் சேர்ந்த மணியான தலைவரின் மகனான தமிழனாரை பெங்களூருக்கு பக்கத்தில் உள்ள மாவட்டத்தின் ஒரு தொகுதிக்கு கை கட்சி சார்பில் வேட்பாளராக்கினர். 'நேற்று கட்சியில் சேர்த்து, இன்று வேட்பாளர் ஆக்குவதா?' என கதர்கள் பலரும் கொந்தளிப்பதோடு, 'பெரிய தொகை ஐம்பதை வாங்கிக் கொண்டு, சீட் கொடுத்திருக்காங்க' எனவும் மூர்த்தி பவனை கிடுகிடுக்க வைக்கின்றனராம்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us