ADDED : டிச 19, 2025 06:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ஈரோடு பிரசாரத்தில் நேற்று பேசிய த.வெ.க., தலைவர் விஜய், 'அரசு நடத்துகிறீர்களா அல்லது கண்காட்சி நடத்துகிறீர்களா' என, தி.மு.க.,வை நோக்கி கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து, சென்னையில் நேற்று துணை முதல்வர் உதயநிதியிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், ''அவரிடம் இதுபோல் கேள்வி கேட்டு உள்ளீர்களா; அவரை முதலில் பேச விடுங்கள்,'' என டென்ஷனாக பதிலளித்தார்.
மேலும், ''தி.மு.க., இளைஞரணி வடக்கு மண்டல மாநாடு நடந்து முடிந்து விட்டது. அடுத்தது என்ன செய்ய போகிறோம் என்பதை, கட்சித் தலைவர் தான் முடிவு செய்வார்,'' என்றார் உதயநிதி.

