ADDED : பிப் 27, 2024 11:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுக்கோட்டை:கரூர் லோக்சபா தொகுதி எம்.பி.,யாக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதிமணி உள்ளார்.
கரூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட விராலிமலையில் பல்வேறு இடங்களில், 'கண்டா வரச் சொல்லுங்க...' என்ற தலைப்பில், எங்க தொகுதி எம்.பி.,யை எங்கேயும் காணவில்லை.
கரூர் லோக்சபா தொகுதி பொதுமக்கள் என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டபட்டிருந்தன.
இதை அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் நின்று படித்து விட்டு செல்கின்றனர்.
லோக்சபா தேர்தல் அறிவிக்கப்படும் நேரத்தில், இதுபோன்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டியிருப்பது பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

