ஜாபர் சாதிக்கால் தமிழகத்துக்கு தலைகுனிவு அ.தி.மு.க., சார்பில் 4ம் தேதி ஆர்ப்பாட்டம்
ஜாபர் சாதிக்கால் தமிழகத்துக்கு தலைகுனிவு அ.தி.மு.க., சார்பில் 4ம் தேதி ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 27, 2024 11:47 PM
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் போதைப்பொருட்களை புழக்கத்தில் விடும் கும்பலை, அந்த நாடுகளின் காவல் துறை தேடி வந்த நிலையில், அவர்கள் இந்தியாவில் இருப்பதாக தகவல் கிடைத்து உள்ளது.
அதைத் தொடர்ந்து, போதைப் பொருட்கள் தடுப்புப் பிரிவும், இதற்காக இயங்கும் டில்லி சிறப்பு போலீஸ் அமைப்பும் இணைந்து நடத்திய சோதனையில், டில்லியில் மூவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்; அவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இந்த கும்பல் தலைவனாக செயல்பட்டவர், சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க., அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக் என்பது தெரியவந்துள்ளது.
ஜாபர்சாதிக், முதல்வர், விளையாட்டுத்துறை அமைச்சர் உட்பட பல அமைச்சர்களுடன் எடுத்த புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. இந்த அரசியல் பின்புலத்தை வைத்து, ஜாபர்சாதிக் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டிருப்பது, தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய தலைகுனிவாகும்.
சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய டி.ஜி.பி., போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவனோடு புகைப்படம் எடுத்திருப்பதை பார்க்கும் போது, தமிழக மக்களின் பாதுகாப்பு எந்த லட்சணத்தில் உள்ளது என்ற அச்சம் எழுவதை தடுக்க முடியவில்லை.
இதற்கு காரணமான, தி.மு.க., அரசை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில், வரும் 4ம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுஉள்ளது.

