'குண்டுவெடிப்பு குற்றவாளிகளை விடுவிக்க முற்படுவது தவறு'
'குண்டுவெடிப்பு குற்றவாளிகளை விடுவிக்க முற்படுவது தவறு'
ADDED : பிப் 14, 2024 12:51 AM

சென்னை:''இந்தியாவிலேயே மதத்தை வைத்துஅரசியல் செய்யும் கட்சி என்றால், அது தி.மு.க., தான்,'' என, தமிழக பா.ஜ., தலைவர்அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவர் பேசி வெளியிட்டுள்ள, 'வீடியோ' பதிவு:
கோவை குண்டுவெடிப்புக்கு காரணமான 16 குற்றவாளிகளை விடுதலை செய்ய, தி.மு.க., அரசு நினைப்பதுதுரதிருஷ்டவசமானது.
லோக்சபா தேர்தலில் பெருமை பேசிக்கொள்ள, தி.மு.க., தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து, அவர்களைவிடுவிக்க நினைக்கிறது.
கடந்த, 1998 பிப்., 14ம் தேதி, கோவை மற்றும் தமிழக மக்களின் மனதில் அழியா நினைவாக என்றும் இருக்கும். ஏனெனில், இதுபோன்ற குண்டு வெடிப்பைதமிழகம் கண்டதில்லை.
அதில், 58 பேர் கொல்லப்பட்டனர்; 200க்கும் மேற்பட்டோர் படுகாய மடைந்தனர். குண்டுகள் 24க்கும் மேற்பட்ட இடங்களில் கண்டெடுக்கப்பட்டன.
அதிகார சக்தி
பா.ஜ., மூத்த தலைவர் எல்.கே.அத்வானியை குறிவைத்து, இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். பாதிக்கப்பட்டது ஒன்றும்அறியாத அப்பாவி மக்கள்.
தற்போது, ஆட்சியில் இருக்கும் தி.மு.க., தன் அதிகார சக்தியின் வாயிலாக, இப்படிப்பட்டகுற்றங்கள் இழைத்த குற்றவாளிகளை பல காலங்களில் விடுவித்துள்ளது; மக்களின் எதிர்ப்பையும் மீறி இதை செய்து வருகிறது.
கடந்த, 2009ல்தி.மு.க., கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதான ஒன்பது குற்றவாளிகளை விடுதலை செய்தது.
தற்போது, பா.ஜ.,வைதவிர அனைத்து கட்சிகளும் ஒரு உருவாக்கப்பட்ட செயற்கையான கோரிக்கையாக மீதமுள்ள, 16 குற்றவாளிகளையும் விடுவிக்க வேண்டும் என,கூறுகின்றன.
ஒரு மோசமான அரசியலை தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் பின்பற்றுவது துரதிருஷ்டவசமானது.
கடந்த அக்டோபரில், இது ஒரு கடும் குற்றம் என்று கூறி, 16 குற்றவாளிகளின் ஜாமின் மனுவை உச்ச நீதிமன்றம்நிராகரித்தது.
கடந்த, 2021ல்தி.மு.க., ஆட்சிக்குவந்தபின், நீதிபதி ஆதிராகவ் கமிஷன் அமைத்து, குற்றவாளிகள் விடுதலை தொடர்பாக அறிக்கை பெற்றது.
விடுதலை செய்ய முயற்சி
அதில், 16 பேரையும் விடுவிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. குற்றவாளிகளை விடுவிக்கத் தேவையான அனைத்து வழிகளையும் தி.மு.க., கண்டறிந்து வருகிறது. தமிழக பா.ஜ., இதை வன்மையாகக் கண்டிக்கிறது.
முன்கூட்டியே குற்றவாளிகளை விடுவிக்க நினைக்கும் தி.மு.க.,அரசுக்கு, தமிழக மக்களும் எதிர்ப்புதெரிவிப்பர்.
கடந்த, 2022 தீபாவளி தினத்திற்கு முன், ஜமேஷா முபின் என்ற ஒரு தற்கொலைப் படை மனித வெடிகுண்டு வாயிலாக கோவையை குறி வைத்து தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அதிர்ஷ்டவசமாக வெடிகுண்டு வைத்தவர் மட்டும் உயிரிழந்தார். பொதுமக்களுக்கு பாதிப்பில்லை.
நேற்று முன்தினம்கூட என்.ஐ.ஏ., சோதனை நடத்தி தொடர்புடைய பலரை கைது செய்துள்ளது. தற்போது, தி.மு.க.,அரசு குற்றவாளிகளை விடுதலை செய்யபார்க்கிறது.
எதிர்க்கவில்லை
இந்தியாவிலேயே மதத்தை வைத்து, அரசியல் செய்யும் கட்சி என்றால், அது தி.மு.க., தான்.
பெரும் குற்றங்களை செய்த தீவிரவாதிகள் என, தவறாக கைது செய்யப்பட்ட கைதிகள் விடுவிக்கப்படுவதை நாங்கள் எதிர்க்கவில்லை.
ஆனால், இது பெரிய குற்றம் என உச்ச நீதிமன்றமே, 2023 அக்டோபரில் கூறிய பின்பும், மனித உயிர்களை விட, லோக்சபா தேர்தலில் வெற்றிபெற குற்றவாளிகளை விடுவிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கோடு, தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கின்றனர்.
கடந்த, 2009ல்தி.மு.க., செய்த அதே தவறை இந்த முறையும் செய்யாது என, நான் நினைக்கிறேன்.
மீறி செய்தால், அதற்கான விளைவுகளையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.

