ADDED : ஆக 25, 2025 05:58 AM

சென்னை: என்.சி.இ.ஆர்.டி., பாடப்புத்தகத்தில், இஸ்ரோ நிறுவனத்தின் வரலாறு சேர்க்கப்பட்டுள்ளது.
என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாடப்புத்தகங்களில், நடப்பு நிகழ்வுகள், கண்டுபிடிப்புகள் மற்றும் பயனுள்ள தகவல்களை, அவ்வப்போது சேர்க்க, மத்திய கல்வி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, 'இந்தியா -எழுச்சி பெறும் விண்வெளி சக்தி' என்ற தலைப்பில், இரண்டு நிலைகளில் பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
அதாவது, 1962ல், விக்ரம் சாராபாய் தலைமையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கான தேசிய குழுவை சேர்ந்த விஞ்ஞானிகள், சைக்கிளிலும், மாட்டு வண்டிகளிலும் ராக்கெட் பாகங்களை ஏற்றிச் சென்று ஆராய்ச்சியில் ஈடுபட்டதில் இருந்து, தற்போது, உலகம் உற்று நோக்கும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாக, 'இஸ்ரோ'வாக வளர்ந்தது வரையிலான விபரம், சுருக்கமான மற்றும் விரிவான பாடங்களாக, இரண்டு நிலைகளாக, 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை இடம் பெற்றுள்ளது.
மோடியின் கருத்து
அத்துடன் பாடத்தில், 'விண்வெளி தொலைவில் இருப்பதாக தோன்றலாம். ஆனால், அது நம் அன்றாட வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாகி விட்டது. நமக்கு நவீன தகவல் தொடர்புகளின் வாயிலாக, தொலைதுார குடும்பங்களை கூட, சாதாரண மக்களுடன் இணைக்கிறது.
இது, நம் விண்வெளி திட்டம், வேகம், வீச்சு எல்லை, தொலை நோக்கு பார்வைக்கு உதாரணம்' என்ற இந்தியாவின் விண்வெளி திட்டம், நமது அளவு, வேகம் மற்றும் திறன் குறி த்த தொலைநோக்கு பார்வைக்கு சரியான எடுத்துக்காட்டு' என்ற பிரதமர் மோடியின் கருத்தும் இடம் பெற்றுள்ளது.