ADDED : டிச 19, 2025 06:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில் தற்போது இருக்கும் அமைச்சர்கள், 'டாஸ்மாக்'கை மட்டுமே நடத்தக்கூடிய நிர்வாகத்தை கொடுத்துள்ளனர். தி.மு.க.,வினர் சமீபத்தில் இளைஞர் அணி மாநாடு நடத்தினர். இதில், மகனுக்கு 'இளம் ஈ.வெ.ரா.,' என்ற பெயரை சூட்டினர். சமூக நீதியைப் பற்றி தெரியாதவருக்கு இளம் ஈ.வெ.ரா., என்ற பட்டம் வழங்குகின்றனர். சூது செய்து மக்களிடம் இருந்து பிரிக்கப் பார்க்கின்றனர். மக்கள் எழுச்சி உங்களை துரத்தியடிக்கும் தேர்தலாக, வரும் சட்டசபை தேர்தல் இருக்கும்.
- ஆதவ் அர்ஜுனா
தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலர், த.வெ.க.,

