கடைசி நேரத்தில் இப்படியொரு மாற்றமா? வெளியானது தினமலர் மெகா சர்வே ரிசல்ட்
கடைசி நேரத்தில் இப்படியொரு மாற்றமா? வெளியானது தினமலர் மெகா சர்வே ரிசல்ட்
UPDATED : ஏப் 18, 2024 08:00 AM
ADDED : ஏப் 17, 2024 08:57 AM

ஐபிஎஸ் அதிகாரி என்ற உயர் பொறுப்பில் இருந்து விலகி, மக்கள் சேவை செய்ய பா.ஜ.,வில் இணைந்த அண்ணாமலை, தமிழக பா.ஜ., தலைவராக உருவெடுத்து, கட்சியை மேன்மேலும் வளர்த்து வருகிறார். பா.ஜ., கட்சியை அதிகளவு இளைஞர்களிடம் கொண்டு சென்ற இவர், அரசியல் மாற்றத்தை நிச்சயம் அளிப்பார் என மக்கள் எதிர்நோக்குகின்றனர். முதல் முறையாக அவர் தலைமையில் லோக்சபா தேர்தலை அதுவும் அதிமுக கூட்டணி இல்லாமல், தனியாக பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க இருப்பது பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை லோக்சபா தொகுதியில் களமிறங்கியுள்ள அண்ணாமலைக்கு, வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்தே ஆமோக ஆதரவு இருந்து வருகிறது. அவரை எதிர்த்து திமுக, அதிமுக நேரடியாக போட்டியிடுவதால், அனைவரின் பார்வையும் கோவை தொகுதி பக்கமே திரும்பியுள்ளது. அப்படியிருக்கையில், கோவை தொகுதியில் அண்ணாமலை வெற்றிப்பெறுவாரா என்பது குறித்து தினமலர் மெகா சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் விஐபி வேட்பாளர்களான ஓ.பன்னீர்செல்வம், ஏ.சி.சண்முகம், எல்.முருகன், டிடிவி தினகரன், தயாநிதி ஆகியோர் வெற்றிப்பெறுவார்களா? என்பதையும் துல்லியமாக தினமலர் மெகா சர்வே தெரியப்படுத்தியுள்ளது.
தேர்தல் சர்வே முடிவுகள் ஐ பேப்பரில் பார்க்கலாம்
மூன்று கட்ட முழு சர்வே ரிசல்டையும் காண...
இன்றைய முடிவுகள் குறித்த தினமலர் டி.வி., சிறப்பு வீடியோ அலசல் காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
அண்மை காலத்தில், தமிழகம் இப்படி ஒரு தேர்தலை பார்க்கவில்லை. இரண்டு திராவிட கட்சிகளுக்கு இடையே தான் போட்டி என்ற நிலை மாறி, பல தொகுதிகளில் சுவாரசியமான மும்முனை போட்டி நிலவுகிறது. மக்கள் இதை எப்படி பார்க்கின்றனர்? இந்த மாற்றத்தை வரவேற்கின்றனரா? உள்ளிட்ட கேள்விகளோடு தேர்தல் அறிவிப்புக்கு பின், கருத்துக்கணிப்பு படிவங்களோடு அவர்களை சந்தித்தோம்.
எத்தனை பேரை சந்தித்தோம்? 88,000 பேரை சந்தித்தோம்!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில்,- 40 லோக்சபா தொகுதிகள், 264 சட்டசபை தொகுதிகள், 3,000 பஞ்சாயத்துகள் என, நம் நாளிதழ் சார்பில் சுற்றித் திரிந்து கருத்துக்கணிப்பை நடத்தியது, ஜெ.வி.சி.ஸ்ரீராம் தலைமையிலான 'வின்னிங் எலக் ஷன்' கருத்துக்கணிப்பு குழு.
இந்த பணி அவர்களுக்கும் சரி, நம் நாளிதழ் ஆசிரியர் குழுவுக்கும் சரி, மிகவும் சவாலாக அமைந்தது. தேர்தல் அறிவிப்புக்கும், ஓட்டெடுப்புக்கும் ஒரு மாதத்திற்கும் சற்றே அதிகமான அவகாசம் மட்டுமே இருந்தது ஒரு காரணம். குறுகிய காலகட்டத்தில் அனைத்து இடங்களுக்கும் சென்று, ஆயிரக்கணக்கான மக்களை சந்தித்தாக வேண்டும்.
அவர்களில் ஒவ்வொருவரிடமும், 'நீங்கள் யாருக்கு ஓட்டுப்போடப் போகிறீர்கள்?' என்ற எளிமையான கேள்வி மட்டும் கேட்க வேண்டும் என்றால், பணி எளிதாக இருந்திருக்கும். ஆனால், ஒவ்வொருவரும் சொல்லும் பதிலுக்கு, காரண காரியம் என்ன? அவர்களின் பதிலுக்கும், அவர்கள் சிந்தை ஓட்டத்திற்கும் பொருத்தம் இருக்கிறதா? என்றெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு நபரிடமும் 20 கேள்விகள் கேட்டோம். அவற்றுக்கு பொறுமையாக பதில் சொன்ன, 88,000 பேருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறோம்.
ஏன் 88,000 பேர்?
பணியை துவங்கும் போது, 40 தொகுதிகளுக்கும் தலா, 2,000 பேர் என்ற கணக்கில், 80,000 பேரை சந்திக்கலாம் என்று திட்டமிட்டு இருந்தோம். ஆனால், கள நிலவரம், எங்கள் திட்டத்தை முழுதுமாக புரட்டிப் போட்டுவிட்டது. ஒவ்வொரு தொகுதியிலும், 1,500 பேரிடம் கருத்து கேட்டு வரும்போதே, கள நிலவரம் மாறத் துவங்கியது.
கணிப்பு துவங்கியபோது, பரவலாக தி.மு.க., ஆதரவு நிலவிய இடங்களில், போகப்போக, பரவலான மாற்றம் ஏற்பட்டு, எதிர்தரப்பில் ஒரு கட்சிக்கு ஆதரவு என்று சூழல் மாறியது. அதாவது, அதே இடங்களில் ஒரு வாரம் முன்பிருந்த கருத்து, அடுத்த வாரம் இல்லை என்ற நிலை உருவானது. இதுதான் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்தது.
இதனால், சில தொகுதிகளில் மீண்டும் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. சில தொகுதிகளில், கருத்துக்கணிப்பு நடந்த இடத்தை தவிர்த்து, வேறு இடங்களில் கூடுதல் நபர்களிடம் கருத்துக்கேட்டு, மாற்றத்தை உறுதி செய்ய வேண்டி இருந்தது. அனைத்திற்கும் மேலாக, கடைசிநேர குட்டி கருத்துக்கணிப்பு, அனைத்து தொகுதிகளிலும் நடத்த வேண்டி இருந்தது.
இந்த கட்டுரையை எழுதும் நேரத்தில் கூட, சில தொகுதிகளில் கருத்துக்கணிப்பு முடியாத நிலையில் உள்ளது. அதனால், நம் நாளிதழின் கருத்துக்கணிப்பு தான் கடைசி வாரம் வரை நடத்தப்பட்ட, ஒரே மெகா கருத்துக்கணிப்பு என, ஐயமில்லாமல் சொல்லலாம்.
இப்போதும், கள நிலவரம், கடைசி இரண்டு நாட்களில், 3ல் இருந்து 5 சதவீதம் வரை மாறக்கூடிய வாய்ப்பு இருப்பதாகத்தான் எங்களுக்கு தெரிகிறது. இந்த மாற்றம் யாருக்கு லாபம் என்றும் சொல்ல முடியவில்லை. ஏனெனில், போட்டி அவ்வளவு கடுமையாக இருக்கிறது. இந்த தேர்தல், வலுவானோருக்கும், வேலை செய்வோருக்குமே வெற்றியை தரும்.
நேற்று முன்தினம் (ஏப்.,15), நேற்று (ஏப்.,16) தலா 15 தொகுதிகளின் நிலவரங்கள் தெரிவிக்கப்பட்டன. இன்று 10 தொகுதிகள் என, பிரித்துப் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான விவாதத்தை, எங்கள் 'யு டியூப்' சேனல் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் பார்க்கலாம்.

- கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு - இணை ஆசிரியர்
சரி, கருத்துக்கணிப்பு சாராம்சமாக என்ன சொல்கிறது? இதற்கான பதில், படத்தில் சூசகமாக சொல்லப்பட்டு இருக்கிறது. இன்று காலை 9 மணிக்கு 3வது மற்றும் இறுதிக்கட்ட முடிவுகள், தினமலர் யூடியூப் பக்கம், ஐ பேப்பர் மற்றும் தேர்தல் களத்தில் வெளியானது.
தேர்தல் சர்வே முடிவுகள் ஐ பேப்பரில் பார்க்கலாம்
இன்றைய 10 தொகுதிகள் குறித்த அலசல் சிறப்பு வீடியோவை காண கீழே உள்ள லிங்கை சொடுக்கவும்
மூன்று கட்ட முழு சர்வே ரிசல்டையும் காண...

