1 கேட்டால் 2 தொகுதி பா.ஜ., 'அடிச்சு விட்ட' தாராளம்!
1 கேட்டால் 2 தொகுதி பா.ஜ., 'அடிச்சு விட்ட' தாராளம்!
ADDED : மார் 21, 2024 12:53 AM
சென்னை:தமிழகத்தில், பா.ஜ., கூட்டணியில் இடம்பெற்றுள்ள தினகரனின் அ.ம.மு.க.,வுக்கு இரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
சென்னை, கமலாலயத்தில், தொகுதி பங்கீடு குறித்து தினகரன், மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, முருகன், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையுடன் நேற்று, ஆலோசனை நடத்தினார். அதில், அ.ம.மு.க.,வுக்கு இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
கூட்டத்திற்கு பின்,தினகரன் அளித்த பேட்டி:
பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், நாங்கள் கேட்ட இரு தொகுதிகளை ஒதுக்கியுள்ளனர். அதை, பா.ஜ., அறிவிக்கும். நான் போட்டியிடுவது குறித்து, கட்சி நிர்வாகிகளிடம் பேசிய பின், முடிவு எடுக்கப்படும். குக்கர் சின்னத்தில் போட்டியிட விண்ணப்பித்துள்ளோம்.
நான் பிறந்த மண் தஞ்சை; அரசியலில் பிறந்த மண் தேனி. அங்கு நான் போட்டியிட வேண்டும் என்பது, மக்களின் விருப்பமாக உள்ளது.
அ.ம.மு.க., மாநில கட்சி என்பதால், கட்சி நிர்வாகிகள் சட்டசபை தேர்தலில் போட்டியிடவே விரும்புகின்றனர். ஒன்பது லோக்சபா தேர்தலில் போட்டியிட விருப்பப்பட்டனர். கூட்டணி பலப்பட வேண்டும்; தொகுதி எண்ணிக்கைமுக்கியமில்லை.
பல கட்சிகள் கூட்டணிக்கு வருவதால், 'ஒரு தொகுதி இருந்தால் கூட கொடுங்கள்' என்றோம். அதற்கு பா.ஜ., இரு தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, வழங்கினர்.
தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் எங்கள் இயக்கம், கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு உதவியாக இருக்கும். தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை, மக்களை ஏமாற்றுவதாகத் தான் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

