sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஜெய் ஸ்ரீராமையும், பாரத மாதாவையும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்: ஆ.ராஜா அடாவடி பேச்சு

/

ஜெய் ஸ்ரீராமையும், பாரத மாதாவையும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்: ஆ.ராஜா அடாவடி பேச்சு

ஜெய் ஸ்ரீராமையும், பாரத மாதாவையும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்: ஆ.ராஜா அடாவடி பேச்சு

ஜெய் ஸ்ரீராமையும், பாரத மாதாவையும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்: ஆ.ராஜா அடாவடி பேச்சு


UPDATED : மார் 06, 2024 11:01 AM

ADDED : மார் 04, 2024 01:41 PM

Google News

UPDATED : மார் 06, 2024 11:01 AM ADDED : மார் 04, 2024 01:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: ‛‛ ஜெய் ஸ்ரீராமையும், பாரத மாதாவையும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். தமிழகமும் ஏற்றுக் கொள்ளாது'' என தி.மு.க., எம்.பி., ஆ.ராஜாவின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், ''திமுக.,வும், காங்கிரசும் நாட்டில் இருந்து அகற்றப்பட வேண்டிய கட்சிகள். திமுக.,வை இனி எங்கு தேடினாலும் கிடைக்காது'' என பிரதமர் மோடி சமீபத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார்.

' தி.மு.க., இருக்காது என்றால் இந்தியாவே இருக்காது ' - குதிக்கிறார் ராஜா

இந்த நிலையில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் திமுக எம்.பி., ஆ.ராஜா பேசியதாவது:தேர்தலுக்கு பிறகு திமுக இருக்காது என்றால் இந்தியாவே இருக்காது... ஜாக்கிரதை.. என்ன விளையாடுறீங்களா.. நான் இந்தியா இருக்காது என்று விளையாட்டுக்கு சொல்லவில்லை. பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சட்டம் இருக்காது. அரசியல் சட்டம் இல்லையென்றால் இந்தியா இருக்காது. இந்தியா இல்லையென்றால் தமிழகம் தனியாக போய்விடும்.

மோடி ஜெயிலுக்கு போவார்


இதை விரும்புகிறதா இந்தியா என்பதை கேட்டு சொல்லுங்கள்.. நீங்கள்(பா.ஜ.,) ஊழலே செய்யவில்லை என்றால் உங்கள் ஆட்சிக்கு அதானியும், மற்றவர்களும் ரூ.6,500 கோடி ரகசியமாக கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? அந்த நிறுவனங்களுக்கு நீங்கள் என்னென்ன அனுகூலம் செய்தீர்கள்? மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் திமுக இருக்காது என்கிறார். நான் சொல்கிறேன், திமுக 40 இடங்களிலும் வெற்றி பெற்று மத்திய அரசை மாற்றினால் மோடி ஜெயிலுக்கு போவார். இவ்வாறு அவர் பேசினார்.

ஏழு பேர் சகோதரர்கள்


தொடர்ந்து ராஜா பேசுகையில், ஆனால், நீ சொல்லுகிற கடவுள் இந்த கடவுள் என்றால், இது தான் ஜெய் ஸ்ரீராம் என்றால், இது தான் ‛ பாரத் மாதா கி ஜே' என்றால், ஜெய்ராமையும், ‛பாரத்மாதாகி ஜே'யையும் நாங்களும் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். தமிழகமும் ஏற்றுக் கொள்ளாது. நீ வேண்டுமானால் சொல்லிப்பார். ராமனுக்கு எதிரி. என்ன ராமனுக்கு எதிரி. எனக்கு தமிழ் ஆசிரியர் சொல்லி கொடுத்துள்ளார்.

நான்கு பேர் அண்ணன் தம்பி ராமன். சீதையை தேடி காட்டுக்கு போறான். வேட்டுவ இனத்தில் குறவனாக காட்டுல இருக்கிற குகன் வர்றான். குகன் ராமனை தொழுது, தேனும், மீனும் கொடுக்கிறான். மீன் சாப்பிட மாட்டார் ராமர். ஆனால், அன்போது தேனை வாங்கிக்கொண்டு தேனை சாப்பிட்டுட்டு மீனை நான் சாப்பிட மாட்டேன் என சொல்லி பக்கத்தில் கொடுத்துட்டு அவன் சொல்றான், ‛‛ நாங்க நாலு பேரு. குகனோடு ஐவரானோம்ங்கிறான்.' என்றான். நீ வந்துட்டப்பா. அண்ணன் தம்பி. நீ குறவன் . நீ வேட்டுவன். இவ்வளவு அன்போடு என்னை பார்த்துக் கொண்டாயே, நீ எனக்கு இனிமேல் 5வது சகோதரன்.

அப்புறம் போறான். சுக்ரீவன் வாரான். போருக்கு துணை நிற்கிறான். குகனோடு ஐவரானோம். குன்று சூழ்வான் மகனோடு அறுவறானோம்ங்கிறான். சுக்ரீவன் வந்தான். எனக்கு உதவி பண்ணான் சீதையை கண்டுபிடிக்கிறதுக்கு இனிமேல் எனக்கு அண்ணன் தம்பி ஆறு பேருனான்.

அப்புறம் வந்தான் விபிஷணன். விபிஷணன் கடைசியாக வந்து சேர்ந்தான் ராவணனை கொல்றதுக்கு. குகனோடு ஐவரானோம். குன்று சூழ்வான் மகனோடு அறுவரானோம். ஐயா நின்னோடு ஏழ்வரானோம். ஏழு பேருடா அண்ணன் தம்பின்னான்.

எந்த ஜாதி எந்த மதம் எங்கு பிறந்தான். எனக்கு ராமாயணத்தில நம்பிக்கையில்லை. ராமன் மீது நம்பிக்கையில்லை. ஆனால் கதையில சொல்றேன். இதுதான் கம்ப ராமாயணம். அப்ப நாலு பேராக அண்ணன் தம்பி பிறந்து, ஒரு குறவரை, வேட்டுவரை இன்னொரு சகோதரனாக, ஒரு குரங்கை இன்னொரு சகோதரனாக, ஏற்றுக்கொண்ட ராமாயணத்திற்கு பெயர் தான் மனித நல்லிணக்கம் என்று சொன்னால், நீ சொல்ற ஜெய் ஸ்ரீராம் ‛சீ'. ‛இடியட்'. இவ்வாறு அவர் பேசி உள்ளார்.






      Dinamalar
      Follow us