ADDED : மார் 04, 2024 06:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார் : வானுார் அருகே மளிகைக் கடையில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்த புதுச்சேரி நபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலையில், பட்டானுார் சர்வீஸ் சாலையில் உள்ள ஒரு கடையில் குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி விற்கப்படுவதாக ஆரோவில் போலீசாருக்கு புகார் வந்தது.
அதன் பேரில், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று கடையில் சோதனை நடத்தினர்.
அப்போது, வினோ என்ற மளிகைக் கடையில், குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து கடை உரிமையாளரான புதுச்சேரி, அரும்பார்த்தபுரம் வி.மணவெளியைச் சேர்ந்த பழனி, 56; என்பவர் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.
ஒன்றரை கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

