ADDED : நவ 06, 2025 06:02 AM

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை:
வடகிழக்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய மியான்மர் - வங்கதேச கடலோரப் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது.
நேற்று காலை நிலவரப்படி, இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக இருந்தது. இன்று, வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் வலுவிழக்கக்கூடும். தமிழக உள்பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்றும் நாளையும், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நவ., 11 வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.
அரியலுார், பெரம்பலுார், திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில், சில இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். சில இடங்களில் இடி, மின்னலுடன், லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

