செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ செய்திகள் / தமிழகம் / 'சார்'களை மறந்து விட்டாரா பழனிசாமி: அமைச்சர் சிவசங்கர் கேள்வி / 'சார்'களை மறந்து விட்டாரா பழனிசாமி: அமைச்சர் சிவசங்கர் கேள்வி
/
செய்திகள்
'சார்'களை மறந்து விட்டாரா பழனிசாமி: அமைச்சர் சிவசங்கர் கேள்வி
ADDED : ஜன 28, 2025 06:17 AM
பழனிசாமிக்கு பதில் அளித்து அமைச்சர் சிவசங்கர் அறிக்கை:சென்னை பெரம்பூரில், தனது தோழி இல்ல விழாவிற்கு செல்வதாக கூறி சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. இதுகுறித்த புகாரில், போலீசார், அவர் இருக்கும் இடத்தை கண்டறிந்து மீட்டனர். அவரோடு இருந்த, இரண்டு பள்ளி சிறுமியரும் மீட்கப்பட்டனர். மூன்று சிறுமிகளையும் காதலிப்பதாகக் கூறி அழைத்துச் சென்று, பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்தியது, விசாரணையில் தெரிய வந்தது. புகார் பெறப்பட்ட உடனே, போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, விரைந்து நீதி கிடைக்கும் வகையில், குற்றவாளிக்கு தண்டனை பெற்று கொடுத்து வருகிறோம். விரைவாக நடவடிக்கை எடுத்து விட்டனரே என்ற விரக்தியிலும், தனக்கு அரசியல் ஆதாயம் கிடைக்க வேண்டும் என்ற ஆர்வத்திலும், வழக்கம்போல் பழனிசாமி அரசை குறை கூறி, அவதுாறு செய்துள்ளார்.'சார்'களை காப்பாற்றுவதில் கைதேர்ந்தவரான அவருக்கு, அ.தி.மு.க., சார்களை நினைவிருக்கிறதா. அண்ணா நகர் சிறுமி வன்கொடுமையில் கைதான, அ.தி.மு.க, வட்டச் செயலர் சுதாகர், பொள்ளாச்சி சம்பவத்தில் கைதான நகர மாணவர் அணி செயலர் அருளானந்தம், மனு கொடுக்க வந்த பெண்ணுக்கு குழந்தை கொடுத்த முன்னாள் அமைச்சர், உள்ளிட்ட 'சார் யார்' மறந்து போனதா?இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.