அரசு பள்ளி மாணவர்கள் மோதல்: தடுக்க முயன்ற ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு
அரசு பள்ளி மாணவர்கள் மோதல்: தடுக்க முயன்ற ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு
ADDED : ஜூலை 29, 2024 06:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி: திருச்சி அரசு பள்ளி மாணவர்கள் மோதலை தடுக்க முயன்ற ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
திருச்சி ஸ்ரீரங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மணவர் ஒருவன் மற்றொரு மாணவன் குறித்து இன்ஸ்டாகிராமில் கிண்டலடித்து புகைப்படம் பதிவிவேற்றினார்.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவர் ஆத்திரமடைந்து சில அடியாட்கள் மற்றும் அரிவாளுடன் பள்ளிக்குள் புகுந்து அந்த மாணவரை தாக்கினார். இதனால் அங்கு இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது மாணவர்கள் மோதலை சிவக்குமார் என்ற ஆசிரியர் தடுக்க முயன்றார். இதில் ஆசிரியர் சிவக்குமாருக்கு தலையில் வெட்டுக்காயம் விழுந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.

