வார தொடக்கத்தில் தங்கம் விலை அதிகரிப்பு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,440 உயர்வு
வார தொடக்கத்தில் தங்கம் விலை அதிகரிப்பு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,440 உயர்வு
UPDATED : நவ 10, 2025 05:18 PM
ADDED : நவ 10, 2025 09:35 AM

சென்னை: சென்னையில் இன்று (நவ.,10) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு காலையில் 880 ரூபாயும், மாலையில் 560 ரூபாய் என மொத்தம் 1,140 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 91,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 160 ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் 11,480 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலையில் அதிக ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. தமிழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஆபரண தங்கம் கிராம், 11,270 ரூபாய்க்கும், சவரன், 90,160 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 165 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று முன்தினம் (நவ.,08) தங்கம் விலை கிராமுக்கு, 30 ரூபாய் உயர்ந்து, 11,300 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 240 ரூபாய் அதிகரித்து, 90,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை. இந்நிலையில், வார தொடக்க நாளான இன்று (நவ.,10) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.110 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.11,410க்கு விற்பனை ஆகிறது.
பிறகு மாலையில் 560 ரூபாய் விலை உயர்வை கண்ட தங்கம், ஒரு சவரன் 91,840 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம், 11,480 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 167 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலையும் 2 ரூபாய் உயர்வை சந்தித்தது.

