sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஜெனரேட்டிவ் 'ஏஐ' தொழில்நுட்பம்: சேதுராமன் சாத்தப்பன்

/

ஜெனரேட்டிவ் 'ஏஐ' தொழில்நுட்பம்: சேதுராமன் சாத்தப்பன்

ஜெனரேட்டிவ் 'ஏஐ' தொழில்நுட்பம்: சேதுராமன் சாத்தப்பன்

ஜெனரேட்டிவ் 'ஏஐ' தொழில்நுட்பம்: சேதுராமன் சாத்தப்பன்


ADDED : மார் 24, 2024 02:32 AM

Google News

ADDED : மார் 24, 2024 02:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'டிவி'யில் விளம்பரங்கள் பார்த்து கொண்டிருக்கும் போது அமிதாப்பச்சன் வந்து தமிழில் பேசுவார். இந்த பொருளை வாங்குங்கள் என்பார். அவருக்கு தமிழ் தெரியாது. ஆனால், அப்போது அவரது வாயசைப்பு, அவர் பேசும் தமிழுக்கு பொருத்தமாக இருக்க வேண்டும். இது இன்றைய தினம், ஜெனரேட்டிவ் 'ஏஐ' தொழில்நுட்பத்தால் சாத்தியம்.

அமிதாப்பின், 'டப்பிங் கன்டென்ட்' பார்வையில் உண்மையானது மற்றும் ரியலிஸ்டிக்காக இருப்பது போன்று தோற்றமளிக்க ஒரு ஸ்டார்ட் அப் முயற்சி செய்து வெற்றியும் கண்டிருக்கிறது. இன்றைய தினம் டிவி., யூடியூப், சினிமா போன்ற துறைகளில் டப்பிங் அதிக அளவில் உபயோகப்படுத்தப்படுகிறது.

நியூரல் கேரேஜ் என்ற கம்பெனியின் 'விஷுவல்டப்' என்ற இந்த 'ஸ்டார்ட் அப்' கம்பெனியின் டெக்னாலஜியை பயன்படுத்தும் போது காட்சியை மறுபடி எடுக்காமலேயே, துல்லியமாக உரையாடல்களை மாற்றலாம். இது எப்படி சாத்தியமாகிறது என்றால், ஜெனரேட்டிவ் 'ஏஐ' என்ற தொழில்நுட்பத்தினால் தான்.

இது நடிகர்களின் உதடுகள், வாய், தாடை மற்றும் புன்னகை வரிகளை டப்பிங் செய்யப்பட்ட ஆடியோவுடன் சரியாக ஒத்திசைப்பதன் மூலம் டப்பிங் செய்யப்பட்ட உள்ளடக்கத்தில் தடையற்ற பார்வை அனுபவத்தை உருவாக்க உதவுகிறது.

இன்று, நடிகர்களின் உதடு மற்றும் தாடை அசைவுகள் அவர்களின் வாயிலிருந்து வரும் வார்த்தைகளுடன் பொருந்தாததால், டப்பிங் செய்யப்பட்ட உள்ளடக்கம் ஒரு ஒத்திசைவான பார்வை அனுபவத்தை வழங்கவில்லை.

இந்த ஸ்டார்ட் அப் கம்பெனியை தோற்றுவித்தவர் கொரியன் மொழியில் இருந்து டப் செய்யப்பட்ட படங்களை அதிகம் பார்ப்பவர். அப்போது அந்த கொரியன் நாட்டு நடிகர்கள் பேசும் ஆங்கிலம் அவர்களின் வாயசைப்புக்கு சிறிதும் பொருந்தாமல் இருந்தது.

அப்படி வாயசைப்பு பொருத்தாமல் இருந்ததால் அவரால் அந்த படத்தை லயித்து பார்க்க இயலவில்லை. இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலில் பிறந்தது தான் இந்த ஸ்டார்ட் அப்.

செயற்கை நுண்ணறிவின் முன்னேற்றங்கள் இந்த சிக்கலைத் தீர்க்க உதவுமா என்று யோசித்து, இந்த தொழில்நுட்பத்தின் சாத்திய கூறுகளை ஆராய ஆராய்ச்சியைத் தொடங்க முடிவு செய்தார். அவரது ஆர்வம் மற்றும் ஆடியோ மற்றும் வீடியோ இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பது. அதன்பின், நண்பர்களுடன் இணைந்து இதனை சாத்தியமாக்கினார்.

எப்படி செயல்படுகிறது?


'நியூரல் கேரேஜ்' என்ற பெயர் நரம்பியல் நெட்வொர்க்குகளைக் குறிக்கிறது. 'விஷுவல் டப்' என்ற இவர்களின் முதன்மை நிறுவனம், நடிகர்களின் உதடு மற்றும் தாடை அசைவுகளை ஆடியோவுடன் ஒத்திசைப்பதன் மூலம் டப்பிங் உள்ளடக்கத்தில் ஆடியோ -விஷுவல் வேறுபாட்டைக் குறைக்கிறது.

'விஷுவல்டப்' பின் தனியுரிம உருவாக்கும் 'ஏஐ' தொழில்நுட்பமானது, பேசப்படும் வார்த்தைகளுடன் நடிகர்களின் தாடை மற்றும் உதடு அசைவுகளை ஒத்திசைப்பதன் மூலம் 'டப்பிங்' உள்ளடக்கத்தில் வெளிப்படையாக இருக்கும் முரண்பாடுகளை நீக்குகிறது.

இணையதளம்: www.visualdub.com.

விவரங்களுக்கு

இ-மெயில்: sethuraman.sathappan@gmail.com

அலைபேசி: 98204 51259

இணையதளம்: www.startupandbusinessnews.com

- சேதுராமன் சாத்தப்பன் -






      Dinamalar
      Follow us