இலவச வேட்டி, சேலைகள் பொங்கலுக்கு முன் கிடைக்கும்
இலவச வேட்டி, சேலைகள் பொங்கலுக்கு முன் கிடைக்கும்
ADDED : டிச 24, 2025 07:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்: ''பொங்கல் பண்டிகைக்கு முன், மக்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படும்,'' என, கைத்தறித் துறை அமைச்சர் காந்தி தெரிவித்தார்.
காஞ்சிபுரத்தில், அவர் அளித்த பேட்டி:
சில ஆண்டுகளுக்கு முன், பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும், வேட்டி, சேலைகளை யாரும் பயன்படுத்த மாட்டர். தி.மு.க., ஆட்சியில் வழங்கப்படும், வேட்டி, சேலைகளை, அனைவரும் பயன்படுத்துகின்றனர். வரும் பொங்கல் பண்டிகைக்கு முன், அனைவருக்கும் வேட்டி, சேலை வினியோகம் செய்யும் பணி முடிக்கப்படும். வினியோகம் எப்போது துவங்கும் என்பதை, முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
***

