sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதற்கு காலக்கெடு நிர்ணயம் 

/

தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதற்கு காலக்கெடு நிர்ணயம் 

தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதற்கு காலக்கெடு நிர்ணயம் 

தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதற்கு காலக்கெடு நிர்ணயம் 


ADDED : அக் 17, 2024 01:31 AM

Google News

ADDED : அக் 17, 2024 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தொழில் திட்டங்களுக்கு விரைவாக அனுமதிஅளிக்கும் வகையில், வணிக விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன.

அதன்படி, அதிக உயரம் இல்லாத கட்டடங்களில் கட்டுமான திட்டத்தை மாற்றுதல், கூடுதலாக சேர்த்தல், திருத்தம் செய்தல், மறுமதிப்பீடு செய்தல் ஆகியவற்றுக்கான அனுமதியை, டி.டி.சி.பி., எனப்படும் நகர ஊரமைப்பு துறை, 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும்.

அதிக உயரம் உள்ள கட்டடத்திற்கு, அதன் தலைமை அலுவலக அளவில், 90 நாட்களுக்குள் அனுமதி அளிக்கப்பட வேண்டும்.

சி.எம்.டி.ஏ., எனப்படும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், 10,764 சதுர அடிக்கு குறைவான கட்டடங்களுக்கு, 45 நாட்களுக்குள் அனுமதி தர வேண்டும். அந்த அளவு அல்லது அதற்கு மேல் உள்ள கட்டடங்களுக்கு, 55 நாட்களுக்குள் அனுமதி அளிக்க வேண்டும்.

சென்னை மாநகராட்சி, 30 நாட்களுக்குள்; நகராட்சி நிர்வாக ஆணையரகம், 45 நாட்கள்; பேரூராட்சி இயக்குனரகம், 45 நாட்கள்; ஊரக வளர்ச்சி இயக்குனரகம், 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும்.

கட்டடத்தை இடித்து புனரமைப்பதற்கானஅனுமதியை, சென்னை மாநகராட்சி, 30 நாட்கள்; நகராட்சி நிர்வாக ஆணையரகம், 45 நாட்கள்; பேரூராட்சி இயக்குனரகம், 45 நாட்கள்; ஊரக வளர்ச்சி இயக்குனரகம், 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும்.

அரசு ஆதாரங்களில் இருந்து நிலத்தடி நீரை எடுப்பதற்கான அனுமதியை, 75 நாட்களுக்குள், நீர்வளத் துறை வழங்க வேண்டும்.

தண்ணீர் வழங்கப்படாததற்கான சான்றை, சென்னை குடிநீர் வாரியம், தமிழக குடிநீர் வாரியம், நகராட்சி நிர்வாகம், பேரூராட்சி பஞ்சாயத்து இயக்குனரகம், இரு வாரங்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us