sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/ பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும்: பா.ஜ.,

பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும்: பா.ஜ.,

பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும்: பா.ஜ.,


ADDED : டிச 29, 2024 07:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 29, 2024 07:03 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழக பா.ஜ., செயலர் அஸ்வத்தாமன் அறிக்கை:

அண்ணா பல்கலையின் பாலியல் கொடூர விவகாரத்தில், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு போராடிய அகில பாரத வித்தியார்த்தி பரிஷத் அமைப்பின் மாநில செயலர் யுவராஜ் மற்றும் அலுவலக செயலர் ஸ்ரீதர் ஆகியோரை, திராவிட மாடல் போலீஸ் நள்ளிரவில் கைது செய்துள்ளது.

குற்றம் செய்தவர்கள் அனைவரையும் கைது செய்யாமல் காலம் கடத்தும் போலீஸ், அதை வலியுறுத்தி போராட்டம் நடத்தியவர்களை கைது செய்வது என்ன மாதிரியான நடவடிக்கை? இது தான், திராவிட மாடல் போலீசின் செயல்பாடு என்றாகி விட்டது.

இப்படி கைது செய்த ஏ.பி.வி.பி., நிர்வாகிகளை, உடனடியாக நீதிபதி முன் நிறுத்தவில்லை. அவர்களை பல மணி நேரம் அலைக்கழித்துள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழக பாலியல் சுரண்டல் விவகாரம் நாடு முழுதும், தி.மு.க., அரசுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா பல்கலை சம்பவத்துக்குப் பின், தமிழகத்தில் பெண் பிள்ளைகளின் பெற்றோர் அனைவரும் ஒருவித அச்சத்திலும், வேதனையிலும் உள்ளனர்.

எத்தனை நாளைக்குத்தான், நீதிகேட்டு போராடுவோரையே பொய் வழக்கில் தமிழக போலீஸ் கைது செய்யும்?

அண்ணா பல்கலையில் தி.மு.க., பிரமுகரால் பாதிக்கப்பட்ட மாணவிக்காக, யாரும் குரல் எழுப்பக்கூடாது என அச்சமூட்டுவதற்காகவே, ஏ.பி.வி.பி.,யினரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த மோசமான செயலை இனியாவது நிறுத்த வேண்டும். பொய் வழக்கை ரத்து செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us