ADDED : அக் 16, 2024 09:23 PM
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கயத்தாரில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு, நேற்று, மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:
அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் மழை பாதிப்பின் போது, மக்களுக்கு உணவு, பால், பெட்ரோல் உட்பட அனைத்து வசதிகளும் கிடைத்தன.
ஆனால், இந்த ஆட்சியில், சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாலும் சேரவில்லை; சோறும் சேரவில்லை. 4,000 கோடி ரூபாய் மதிப்பில், மழைக்கால பேரிடர் தடுப்பு பணிகள் நடந்ததாக முதல்வர், அமைச்சர், மேயர் மற்றும் அதிகாரிகள் என, ஒவ்வொருவரும் ஒரு தகவலை கூறுகின்றனர். உண்மையில் என்ன நடந்தது என்பது மர்மமாக இருக்கிறது.
மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்து கொண்டால் தான், சென்னையில் வாழ முடியும் என்ற நிலை தி.மு.க., ஆட்சியில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

