ADDED : நவ 01, 2024 04:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக அனல், புனல், காற்றாலை, சோலார், மத்திய அரசு மின் தொகுப்பு மூலம் அதிகபட்சம், 19,064 மெகாவாட் மின்சாரம் வினியோகம் செய்யலாம்.
தீபாவளியான நேற்று பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு விடுமுறை விடப்பட்டன. இதனால் இயந்திரங்கள் பயன்பாடு குறைந்து அதற்கேற்ப தமிழக மின்நுகர்வு, 12,243 மெகாவாட்டாக சரிந்தது. கடந்த மே 2ல் தமிழக மின்நுகர்வு அதிகபட்சம், 20,830 மெகாவாட் ஆக உயர்ந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் நேற்று 8587 மெகாவாட் சரிந்தது.
- நமது நிருபர் -

