ADDED : செப் 17, 2025 05:57 PM

சென்னை: எத்தியோப்பியாவில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு போதைப்பொருள் கடத்தி வந்த கென்யா நாட்டு வாலிபர் கைது கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.20 கோடி மதிப்பிலான போதைபொருளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கிழக்கு ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு, விமானத்தில், போதைப்பொருளை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் கடத்தி வருவதாக, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விமானத்தில் வந்தவர்களில், சந்தேகத்திற்குரிய நபர்களை நிறுத்தி விசாரித்தனர். கென்யா நாட்டு வாலிபரிடம் விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.
பின்னர் அவரின் உடைமைகளை பிரித்து பார்த்த போது, போதைப்பொருள், கடத்தி வந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து கோகைன் போன்ற தோற்றமுடைய போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அது எங்கிருந்து கடத்தி வரப்பட்டது, இந்தியாவில் யாருக்காக கொண்டு வரப்பட்டது என்று மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புத்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர். பிடிபட்ட போதைப்பொருள் மதிப்பு ரூ.20 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட கென்யா நாட்டு வாலிபருக்கு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.