sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஸ்டாலினுக்கு ஜால்ரா அடிக்கும் காங்கிரஸ் தலைவர்கள்: அண்ணாமலை

/

ஸ்டாலினுக்கு ஜால்ரா அடிக்கும் காங்கிரஸ் தலைவர்கள்: அண்ணாமலை

ஸ்டாலினுக்கு ஜால்ரா அடிக்கும் காங்கிரஸ் தலைவர்கள்: அண்ணாமலை

ஸ்டாலினுக்கு ஜால்ரா அடிக்கும் காங்கிரஸ் தலைவர்கள்: அண்ணாமலை

15


UPDATED : ஜன 02, 2026 09:48 PM

ADDED : ஜன 02, 2026 05:18 PM

Google News

15

UPDATED : ஜன 02, 2026 09:48 PM ADDED : ஜன 02, 2026 05:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலூர்: '' டில்லிக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் காங்கிரசார் ஜால்ரா அடித்து வருகின்றனர். தமிழக மக்களை பற்றி கவலைப்படவில்லை,'' என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கைவந்த கலை

இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நான்கரை ஆண்டுகளாக தமிழக முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார். வைகோ திருச்சியில் இருந்து மதுரை வரை 11 வது முறையாக நடைபயணம் மேற்கொள்கிறார். அங்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்துள்ளார். கஞ்சா பழக்கம் அதிகரித்துள்ளது. இதற்கு மத்திய அரசு மீது பழி போட பார்க்கிறார்.இது திமுகவுக்கும், முதல்வருக்கும் கை வந்த கலை. தேர்தலுக்கு ஆறு மாதம் இருக்கும்போது தான் இதனை கையில் எடுப்பார்கள்.

அரசியலமைப்பு குறித்து முதல்வருக்கு பாடம் எடுக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு மாநில அரசின் பொறுப்பு இதற்காக தான் போலீசார் மாநில அரசின் கீழ் உள்ளது.
போலீஸ், உளவுத்துறை,கஞ்சா ஒழிப்பு பிரிவு ஆகியன மாநில அரசின் பொறுப்பு. மாநில அரசுக்கு உதவ போதைப்பொருள் தடுப்புப் பிரிவை மத்திய அரசு வைத்துள்ளது.

முந்தைய ஆட்சி காலத்தில் போலீசார் திறமையாக பணியாற்றினர். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கஞ்சா புழக்கம், பயங்கரவாத சம்பவங்கள் அதிகரித்துள்ளன.தங்களது குழந்தைகள் கஞ்சா புழக்கத்தால் பாதிக்கப்படுவதாக சாமானிய மக்களும் கூறுகின்றனர்.

கடத்தல்

வெளிநாடுகளில் இருந்துவரும் போதைப்பொருளை மத்திய அரசு திறமையாக தடுத்து வருகிறது. இன்று தமிழகத்தில் நடுத்தர மக்கள்,பள்ளி மாணவர்களை தாக்கும்,கஞ்சா எங்கிருந்து வருகிறது. மாநிலங்களுக்கு இடையே கடத்தப்படுகிறது. இதற்கு எல்லையில் போலீசார் இருக்க வேண்டும். மாநிலத்திற்குள் இருந்து வருகிறது. ஆய்வகம் வைத்து உருவாக்குகின்றனர். ஆன்லைன் மூலம் வருகிறது.

என்னால் தமிழகத்தை நிர்வாகம் செய்ய முடியவில்லை. காவல்துறையை நிர்வாகம் செய்ய முடியவில்லை என ஸ்டாலின் கூறினால் மத்திய அரசு பார்த்துக் கொள்ளும்.


ஏற்க முடியாது

முழு பொறுப்பை வைத்துக் கொண்டு இவ்வளவு பொய்யை சொல்கிறார்.ஆனால், அடுத்த ஆறு மாதம், மத்திய அரசு ஆதரவு கொடுக்காவில்லை. கஞ்சாவை மத்திய அரசு தடுக்கவில்லை. காவல்துறையை மத்திய அரசு கட்டிப்போட்டுவிட்டது என ஸ்டாலின் கூறிக் கொண்டு இருப்பார்.



இதனை மக்கள் நம்ப மாட்டார்கள். மத்திய அரசு, மாநில அரசின் வேலை என்ன என மக்கள் நன்றாக புரிந்து கொண்டுள்ளனர். தோல்வி அடைந்தால் ஒப்புக் கொள்ளட்டும். முதல்வராக தோற்றுவிட்டேன் என்றால் பதில் சொல்கிறோம். தோற்றுவிட்டு மத்திய அரசு மீது பழிபோடுவதை ஏற்க முடியாது.

நடவடிக்கை இல்லை


காங்கிரசை பொறுத்தவரை யார் டில்லிக்கு ஜால்ரா போடுவது; தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு ஜால்ரா போடுவது என இரண்டு குழுக்கள் உள்ளன. இரண்டு குழுக்களை தவிர மக்களை பற்றி கவலைப்படும் குழு யாரும் இல்லை. ஒருவேலை காங்கிரஸ் விஜய் கூட்டணி வைத்தால், சிதம்பரம் திமுக உடன் கூட்டணி வைப்பார் என நாளிதழில் செய்தி வந்துள்ளது.

விஜயை பார்த்தவிட்டு காங்கிரஸ் தலைவர் கடன் சுமை பற்றி பேசுகிறார். நேர் எதிர் சூழலில் பேசுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. ஜோதிமணி ஒரு கருத்து போடுகிறார். காங்கிரஸ் கடையை சாத்தும் நேரம் வந்துவிட்டது.

காமராஜர் காலத்தில் இருந்த கதர் சட்டை போட்டவர்கள் ஜிகே வாசனிடம் வந்துவிட்டனர்.இப்போது இருக்கும் காங்கிரஸ் இந்திரா காங்கிரஸ். காமராஜரை தோற்க வேண்டும் என பாடுபட்டவர்கள் தான் தற்போது இருக்கும் காங்கிரஸ். காங்கிரஸ் அழிந்து கொண்டு இருக்கிறது. இதற்கு தலைவரே அதற்கு சான்று. தமிழக காங்கிரஸ் தலைவர் சான்று.



நடுரோட்டில்


இந்த பக்கம், அந்த பக்கம் சண்டை போட்டு நடுரோட்டில் நிற்பார்கள். சட்டசபை தேர்தல் நடக்கும் போது, அவர்கள் நடுரோட்டில் நிற்க போகிறார்கள். அதற்கான வேலையை ஆரம்பித்துவிட்டனர். குதிரை பேரம் பேசுகின்றனர். ஆட்சியில் பங்கு வேண்டும் என்கின்றனர்.

அதிக தொகுதி வேண்டும் என்கின்றனர். காங்கிரஸ் எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம். இந்தியாவில் காங்கிரஸ் எப்படி இல்லையோ. அதேபோல் தமிழகத்திலும் அழிந்து கொண்டு இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து எறும்பு நிலை போன்று இருக்கிறது.

வெற்றி

கேரளாவில் பாஜ மீது மக்கள் நம்புகின்றனர். இது ஆரம்பம் தான். இந்தமுறை கேரளாவில் பாஜ வெற்றி உறுதியாக இருக்கிறது. காங்கிரஸ் அங்கு இல்லை. கம்யூனிஸ்ட் தேய ஆரம்பித்துள்ளது.

திருப்புமுனை

நயினார் நாகேந்திரன் 53 இடங்களில் சுற்றுபயணம் செய்துள்ளார். மிக வெற்றிகரமான நடைபயணத்தை புதுக்கோட்டையில் நடக்கும் விழாவில் அமித்ஷா பங்கேற்க உள்ளார். இது தொண்டர்களின் விருப்பம். அரசியல் திருப்புமுனையாக இந்த கூட்டம் இருக்கும். யாரை அழைப்பது என தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் முடிவு செய்வார்கள். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.






      Dinamalar
      Follow us