ADDED : அக் 06, 2024 11:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : ''ஹரியானா, காஷ்மீரில் காங்., கூட்டணி தான் ஆட்சி அமைக்கும்,'' என, சிவகங்கையில் காங்., எம்.பி., கார்த்தி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: ஹரியானாவில் காங்., கட்சியினர் தான் முதல்வர் பதவி வகிப்பர். அங்கு தனிப்பெரும்பான்மையில் காங்., வெற்றி பெறும். காஷ்மீரிலும் காங்., கூட்டணி தான் ஆட்சி அமைக்கும். பொதுப்பிரச்னையை முன்வைத்து என் கடமையை செய்து கொண்டு இருக்கிறேன்.
திரை உலகில் இருந்து வந்து தனக்கென ஒரு கொடியையும், தொண்டர்களையும் ஏற்படுத்தி வெற்றி பெற்றவர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., மட்டும் தான். அவரை தவிர திரை உலகில் இருந்து யாருமே தன்னிச்சையாக ஒரு கட்சியை தொடங்கி வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை. என்றார்.

